For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 16... "நீந்துதல்"

Google Oneindia Tamil News

சென்னையில் இருந்து போன் கால் . "ஹலோ பெம்மி (பெரியம்மா ) எப்டி ஈக்கீங்க ?! "நா நல்லா இருக்கேன் ...நீ எப்டி இருக்க குட்டி ? "நா லல்லா இருக்கேன் ..இங்க நிறைய பிரன்ஸ் கிடைச்சுட்டாங்க" ..."அப்டியாடா வெரி குட் " "அப்புறம் அம்மா உங்களுக்கு வாட்ஸப்ல ஒரு பிக்ச்சர் அனுப்பியிருக்காங்க ..பாத்துட்டு கூப்பிடுங்க !" ஓகே வா ?!

..அப்டி என்ன அனுப்பீர்க்கும் ஜெஸ்ஸி ன்னு ? யோசிச்சுகிட்டே ஓபன் பண்றேன் ...கலர் கலரா நிறைய கூழாங்கற்கள் ..ஒரு கண்ணாடி தொட்டியில! ...

Sillunnu Oru Anubavam swimming written by Vijaya Giftson

"பெம்மி..பாத்தீங்களா? .. ஆமா வேற வேற கலர் ஸ்டோன்ஸ் பாத்தேன்! அது இல்ல ..அதுக்குள்ள நல்..லா பாருங்க ..அங்க குட்டி குட்டியா ஓடுதா ? இன்னிக்கு தான் பொறந்துச்சு , ..ஆ பேபி பிஷ் -- ரெண்டு இருக்கே ..ஹை செம்ம அழகா இருக்குடா .. இல்ல பெம்மி த்ரீ இருக்கு !

அந்த ரோஸ் கலர் கல்லுக்கு பின்னாடி ஒன்னு , அப்புறம் ஆரஞ் கலர் கல்லுக்கு பின்னாடி ஒன்னு ஒளிஞ்சுருக்கு பாருங்க .....அப்டியா? .."ஆமா .. ...நல்லா ஜும் பண்ணி பாருங்க"..ஆமாடா ...சூப்பரா இருக்குல்ல ...நானும் அப்பாவும் போயி வாங்கிட்டு வந்தோம் ..

என்ன மீன்டா அது? ..அடுக்கு பேரு "கப்பீஸ் "சாம் . அந்த தொட்டிக்குள்ள குட்டி வீடு மாதிரி வச்சு வீல் இருக்கா .. அது சுத்தும் போது நிறைய நிறைய பபிள்ஸ் வரும் ..ம்ம்ம் ..அதுல தான் ஆக்சிஜன் வருமாம் ..அப்போ தான் மீன்லாம் சாவீராம இருக்கும் .

ஒரு தடவை மீன் பண்ணை மற்றும் அக்குவேரியம் வைத்திருக்கும் வியாபாரியிடம் இதைப்பற்றி பேச நேர்ந்தது !பொதுவாகவே நிறைய வீடுகளில் மீன் வளர்ப்பு தொட்டிகள் என்றால் பத்தில் இருந்து பதினைந்து கோல்டுபிஷ்கள் தான் வாங்கி வைப்பார்கள் .. ஆரஞ்சு மஞ்சள் நிறமிகள் தான் அவைகளுக்கு அப்படியொரு நிறத்தை அளிக்கின்றன ! நன்றாக கூர்ந்து பார்த்தீர்களானால் இருபத்து ஐந்தில் இருந்து முப்பத்து ஒன்று வரை செதில்கள் இருக்குமாம் ..

மீன் வகைகளிலேயே மிகுந்த நுகரும் திறனும் , கேட்டல் திறனும் , கோல்டுபிஷ்களுக்கு தான் அதிகம் என்கிறார்கள் ..சிறந்த அறிவாளிகளும் கூட ..எவ்வளவு ஆக்சிஜன் குறைவாக இருந்தாலும் அவைகள் தாக்கு பிடித்து வாழக்கூடியவை ! நாம் தொட்டியின் அருகில் சென்றால் கூட அவைகளுக்கு நன்றாக தெரியும் ! உடனே அந்த பெரிய முட்டைக் கண்களுடன் வந்து எட்டிப்பாத்துட்டு தான் போகும் ..

எனது நண்பர்கள் நிறைய பேர் அவைகளுக்கு பெயர்கள் சூட்டி கூட வைத்திருப்பார்கள் ..கேக்கவே சிரிப்பா இருக்கும் ..நாய் போன்ற செல்லப் பிராணிகளுக்கு பெயர் வைப்பது இயல்புதான் ..அதுக்காக மீன்களுக்குமா ? என ஆச்சர்யப்பட்டு போனேன் ..ஆமாங்க ஜாஸ் ,ஜேக் , ஜூனோ , போண்டா , லட்டு , கிளேவ் , ரொம்ப பாப்புலரான டோரி என்று கூப்பிட்டு சிலாகிக்கிறார்கள் சிலர் .. முக்கியமாக வேறு எந்த ரக மீன்களைத் தொட்டியில் சேர்த்து கொண்டாலும் அவைகளுடன் மிகுந்த நேசமாக ஒத்துப்போயி வாழும் தன்மை கொண்டவை இவை! என பல விவரங்கள் சொல்லிக்கொண்டே போகிறார் ..இப்போ கூட வாங்களேன்னு மீன் விற்பனை பண்ணைக்கு கூப்டு போயி காமிச்சார் ..

அடேங்கப்பா எத்தனை எத்தனை ரகங்கள் ..."மேடம் இன்னிக்கு பாதி பேரு இவனைத்தான் முதல்ல வாங்கிகிட்டு போறாங்க ..பேரு "அரோவனா" --இதில் ரெட் அரோவனா , பிளாட்டினம் அரோவனானு பல வகைகள் இருக்கு .. அதே மாதிரி தான் "பிளவர் ஹார்ன்"னும் .. இவன வீட்டுக்கு கொண்டு போயி நல்லா கவனிச்சுக்கிட்டா போதும் , அதிஷ்டம் , அன்பு, சந்தோசம்லாம் பெருகுமாம்.. அப்டின்னு வாஸ்து பாக்குறவங்க சொல்றாங்க .. ...

அடுத்தது இருக்கானுவோ பாருங்க ..சேட்டைக்கார பயலுக -அதாங்க " பைட்டர் பிஷ் "--சண்டை கோழிங்க ..வேற யாரையும் கூட சேக்க மாட்டானுங்க . வேற யாராச்சும் கூட ஒரே தொட்டியில போட்டுட்டோமோ ....அவ்ளோ தான் .. சோலி முடிஞ்சுது! ...இது "ஷார்க்கு" ..இதுக எப்பவுமே சூட்டிப்பா இருக்கும் ..நல்ல நீண்ட ஆயுள் இருக்கக்கூடிய இனம் பாத்துக்கோங்க .. அடுத்ததா கண்ணுக்கு குளிர்ச்சியா அழகான நிறங்களில் . .இது பாரட் வகைகள் மேடம் ..ரெட் பாரட், பிங்க் பாரட் , க்ரீன் பாரட் ..அடுத்தடுத்த தொட்டிகளில் பிளாக் மவுஸ் , லயன் ஹெட் ..

பெரிய பெரிய வீடுகளில் மிகப்பெரிய தொட்டிகளை வாங்கி செல்கிறவர்கள் "ஆஸ்க்கார் "வகைகளை வாங்குவார்கள் ..அதிலும் "டைகர் ஆஸ்க்கார் , லெமன் ஆஸ்க்கார் " பிரபலம் ..மேடம் இங்க வாங்க ..இவன பாருங்க ..பல்லோட இருப்பான் ..பாத்திருக்கீங்களா ங்கிறாரு ...ஆத்தீ இது என்ன புதுசா இருக்கு ..!! ஆமாங்க இவைகள் சின்ன சின்ன நத்தைகளை கூட சாப்ட்ரும் ... ன்னாரு ..வடிவேலு அண்ணன் சொன்ன மாதிரி ..."நா அப்புடியே சாக் ஆயிட்டேன் !" உங்களுக்கு எந்த வெரைட்டி னாலும் வாங்கிட்டு போங்க " னு பல சுவாரிசயமான தகவல்களை சொன்னாரு ...

ஒவ்வொரு தொட்டி பக்கமும் நாங்க போக போக .. நடக்க நடக்க அவை துள்ளிக்குதிக்கின்றன ...அதை நாம் நன்றாக பார்க்க முடிகிறது ! அவர் ஒருபடி மேல போயி " என்னங்கடா சாப்டீங்களா ? னு அது கூட பேசிட்டு வேற இருக்காரு ..இப்போல்லாம் நிறைய நிறைய பிஷ் புட் வந்துட்டு மேடம் ..ஆனாலும் சின்ன சின்ன புழுக்கள் , இறால்கள் , இலைகள் , முட்டைகள் , இவைகளை விரும்பி சாப்பிடுவான் இவன் ..என்றார் ..அதுக்காக தான் மேடம் நிறையபேரு இயற்கை செடிகளை வாங்கி செல்கின்றார்கள் என்றும் சொன்னார் ..

இவையெல்லாம் ஜெஸ்ஸி கூட பேசும் போது மனசுல ஓடிட்டே இருக்கு .. ஆமா "சாவீரும்னா என்னடா?" ..னு கேட்டேன் .."அதுவா பெம்மி ஒரு நாள் ஒரு கப்பீஸ் ஒடம்பு சரி இல்லாம இருந்துச்சு ,, நானும் கொஞ்சூண்டு பிஷ் புட் எடுத்து போட்டு பாத்தேனா ..அது சாப்பிடவே இல்ல ..அப்புறம் அணுகா அக்கா வீட்ல அந்த ஆண்ட்டி சொன்னாங்க ..ஒடம்பு சரியில்லாத பிஷ்ஷ ஒரே தொட்டியில போட கூடாது ..போட்டா மத்த மீனுலாம் இத கடிச்சே கொன்னுரும் ...அதுனால தனியா ஒரு ஸ்மால் பாட் எடுத்து போட்டு வச்சோம் ..அப்போ அதுக்கு ஒன்னு ஆகலையா?..அது ரெம்ப டயர்டா வே இருந்துச்சு ..பின்ஸ்ச மட்டும் இப்டி இப்டி ஆட்டிட்டே இருந்துச்சு ..ஆனா சாகவும் இல்ல ..நா கூட அத ரொம்ப மோட்டிவேட் பண்ணி சியர் பண்ணேன் தெரியுமா! ங்கிறா ..

எனக்கு ஆர்வம் தாங்கல ...ஒடனே அவகிட்ட..."அப்டின்னா ?"--- " பாரு பாரு உன் பிரென்ஸ்லாம் எப்படி அழகா நீந்துறங்க னு பாரு , கம் ஆன் நீயும் ஸ்பீடா நீந்து நீந்து னு அதுகிட்ட சொன்னேன் ! அடு அவ்ளோ அழகா நீந்துச்சு தெரியுமா! னு சொன்னா ..ஆனாலும் ரொம்ப நாள் அதுனால லீவ் லிவ் பண்ண முடியல ..சாவீட்டு பெம்மி ன்னு சோகமா சொன்னா "

"ஒஹோ செத்துப்போச்சா ?!" " ஆ அதான் பெம்மி !" ச்ச ஒரு குழந்தைக்கு சக உயிரின் மேல் எவ்வளவு அக்கறை - பாசம் என்று நினைத்து திகைத்து போனேன் ..அதைவிட மொபைலை வைக்கும் பொழுது ஒன்னு சொன்னா பாருங்க ..."நாமளும் இந்த மீன் மாதிரி இருந்தா ... தண்ணியில நீந்தி நீந்தி ஹாப்பியா இருக்கலாம் என்ன பெம்மி ?! எனக்கும் அந்த கணமே மீனாக மாற வேண்டும் போல இருந்தது !

#குழந்தைகள் உலகம்
#வாழ்தல்அழகு
விஜயா கிப்ட்சன்
[email protected]

(அழகிய அனுபவங்கள் தொடரும்)

[அத்தியாயம்: 1, 2, 3, 4, 5, 6,

8</a>, <a class=9, 10, 11, 12, 13, 14, 15, 16]" title="8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16]" />8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16]

English summary
Sillunnu Oru Anubavam is a story series and this is about swimmig written by Vijaya Giftson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X