மேடையில் டி ராஜேந்தர் கேட்ட கேள்வி! கண்ணீரோடு நின்னேன், யாரும் துணைக்கு வரல.. சாய் தன்ஷிகா உருக்கம்
சென்னை: நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள 'யோகிடா' படம் இன்று (பிப்ரவரி 6) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் - திரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சாய் தன்ஷிகா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் பல யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியா பேட்டிகளில் கலந்துகொண்டு, தனது சினிமா அனுபவங்களை மனம் திறந்து பகிர்ந்து வருகிறார்.
இந்த பேட்டிகளின் போது, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'விழித்திரு' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சர்ச்சை குறித்து கேள்வி எழுந்தது. அந்த நிகழ்வில், மேடையில் இருந்த இயக்குநர் டி. ராஜேந்திரன் பெயரை தற்செயலாக சொல்லாமல் விட்டது தான் அந்த பிரச்சனையின் தொடக்கம். ஆனால் அந்த ஒரே சம்பவம் பின்னர் பெரிய சர்ச்சையாக மாறி, சாய் தன்ஷிகாவுக்கு மனதளவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

சாய் தன்ஷிகா வருத்தம்
அந்த சம்பவத்தை பற்றி சாய் தன்ஷிகா பேசும்போது, "விழித்திரு படத்தின் ப்ரோமோஷன் மேடையில் இயக்குநர் டி. ராஜேந்திரன் பெயரை சொல்ல மறந்தது திட்டமிட்டு செய்யப்பட்டது இல்லை. அது ஒரு சாதாரண தவறுதல்தான். ஆனால் அதற்கு அவர் வெளியே பேசிய விதம் எனக்கு ரொம்பவே மன வருத்தம் கொடுத்தது. அந்த மேடையில் இருந்த யாருமே எனக்காக ஒரு வார்த்தை கூட பேசாதது இன்னும் அதிகமாக காயப்படுத்தியது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நிகழ்வுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி பரவிய விமர்சனங்கள் குறித்து பேசும்போது, "நான் பப்ளிசிட்டிக்காக அப்படி செய்தேன் என்று பலர் சொன்னார்கள். உண்மையிலேயே அது பப்ளிசிட்டி என்றால், ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வராமலே நான் ஏன் முடங்கி இருக்க வேண்டும்? அந்த அளவுக்கு அது என்னை மனதளவில் பாதித்தது" என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
கால் மேல் கால் போட்டு அமர்ந்ததற்கே விமர்சனம்
அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், சாய் தன்ஷிகா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை கூட டி. ராஜேந்திரன் கடுமையாக விமர்சித்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதமாக மாறியது. பெண்கள் மேடையில் அமரும் விதம் கூட விமர்சிக்கப்படும் சூழல் குறித்து பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்த சம்பவம் நடந்தது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் என்றாலும், தொகுப்பாளர் இதை குறித்து கேள்வி எழுப்பியதால்தான் இப்போது மீண்டும் அதைப் பற்றி பேச நேர்ந்ததாக தன்ஷிகா தெரிவித்துள்ளார். இல்லையென்றால் அந்த கசப்பான அனுபவத்தை மீண்டும் தோண்டி எடுக்க அவர் விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
சாய் தன்ஷிகாவின் சினிமா பயணம்
சாய் தன்ஷிகா, ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சவாலான ரோல்களில் நடித்தவர். 'பேராண்மை', 'ஆரம்பம்', 'கபாலி' போன்ற படங்களில் அவரது நடிப்பு கவனம் பெற்றது. குறிப்பாக 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்ததன் மூலம், தமிழ் சினிமா முழுவதும் அவருக்கான அடையாளம் உருவானது.
வழக்கமான கமெர்ஷியல் ஹீரோயின்களைப் போல இல்லாமல், தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வது தான் தன்ஷிகாவின் ஸ்டைல். ஆக்ஷன், திரில்லர், ரகசியம் நிறைந்த கதைகள் ஆகியவற்றில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
தன்ஷிகாவுக்கு முக்கியமான கட்டம்
இன்று வெளியாகியுள்ள 'யோகிடா' படம், சாய் தன்ஷிகாவின் கேரியரில் இன்னொரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவர் மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் என்பதால், இந்த படம் அவரது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், "இது எனக்கு சவாலான படம். ரிஸ்க் எடுத்துத் தான் இந்த கதையை தேர்வு செய்தேன்" என்று தன்ஷிகா கூறியிருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள்
சமீப காலமாக சாய் தன்ஷிகா - நடிகர் விஷால் திருமணம் குறித்த செய்திகள் மீண்டும் மீண்டும் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், திரையுலக வட்டாரங்களில் மட்டும் இந்த பேச்சு அடிக்கடி கேட்கப்படுகிறது. திருமணம் குறித்து கேள்வி எழும்போது, சாய் தன்ஷிகா பொதுவாக தனிப்பட்ட விஷயங்களை மீடியாவிலிருந்து தள்ளி வைக்க விரும்புவதாக கூறி வருகிறார்.
-
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications