For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக அகிம்சை தினம்

Google Oneindia Tamil News
Mahatma Gandhi

<strong>இரண்டாம் பக்கம்...</strong>இரண்டாம் பக்கம்...

இங்கு சத்தியாக்கிரகம் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்துவதாக இருக்கும்.

1. இது தைரியசாலிகளின் ஆயுதம். ஒருபோதும் கோழைகளின் ஆயுதம் அல்ல.
2. எத்தகைய துன்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் ஒருபோதும் பழிவாங்க முயலாதே.
3. எதிரியையும் ஆதரி. ஆனால், தீய செயலுக்கு வெறுப்பை காட்டிக்கொள்.
4. எதிரியை தோற்கடிக்காமல் அல்லது புண்படுத்தாமல், காயப்படுத்தாமல் அல்லது இழிவுபடுத்தாமல், அன்பினூடாக எதிரியை வெற்றி கொள்வதன் மூலம் முரண்பாட்டை தீர்ப்பதில் உறுதியாக இரு.
5. துன்பத்தை ஏற்படுத்தாமல் துன்பத்தை ஏற்றுக்கொள்;.
என்பவையே அவை.

சத்தியாக்கிரகத்தின் இந்த அம்சங்கள் இன்றைய யதார்த்தத்திற்கு முரண்பட்டவை என்று நோக்கப்படக் கூடும். ஆனால், இன்று உலகிலே அநேகமான முரண்பாடுகள் இதன் அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டு சேர்பியாவில் ஒட்போர் புரட்சி மூலம் மிலோசெவிக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், "வன்முறையற்ற முரண்பாட்டுக்கான சர்வதேச நிலையமானது, அகிம்சை செயற்பாடுகள் மற்றும் உபாயங்களின் முன்னேற்றத்திற்கான நிலையம் என்ற அமைப்பை உருவாக்கியிருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், ஜோர்ஜியா, உக்கிரைன், லெபனான்இ கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் அகிம்சைப் பாணியிலான வன்முறையற்ற மாபெரும் வெகுஜன இயக்கங்கள் ஜனநாயக மலர்ச்சிக்கும் அமைதிக்கும் வித்திட்டிருக்கின்றன.

1999ல் சான்பிரான்ஸிஸ்கோவை அடிப்படையாகக் கொண்ட சிவில் உரிமையாளரும் சமாதான செயற்பாட்டாளருமான டேவிட் ஹார்ட்சோ மற்றும் சென் போல் சமூக அமைப்பாளர் மெல் டுன்கன் ஆகியோர் ஹேக் நகரில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு பின்னர் மேற்கொண்ட முயற்சியால், உலகம் பூராவும் தொண்டர்களை ஏற்படுத்தி, ஒரு அஹிம்சை வழித் தலையீட்டு படைக்கான தொடக்கத்தை இட்டனர். வன்முறையில் இருந்து உலகத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். ஒரு சமாதான இராணுவத்தை' (சாந்தி சேவா) ஸ்தாபிக்கும் மகாத்மா காந்தியின் கனவின் நிறைவேற்ற ஆரம்பம் என்று இதனைக் கொள்ளலாம்.

காந்தியின் அகிம்சை போராட்டத்தின் அடுத்த அம்சம் சர்வோதய' ஆகும். பெரும்பான்மையினருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் நன்மை பெறுதலை இது குறிக்கிறது. இதனை மனதிற்கொண்டு தான், வினோபா பாவே மூலம் மகாத்மா காந்தி சர்வோதய இயக்கத்தை' ஸ்தாபித்தார். தொண்டர் படைகளை அமைத்த காந்தி, ஆச்சிரமங்களில் இருந்து அவர்களை கிராமங்களுக்கு அனுப்பி சமூக சேவையில் ஈடுபடுத்தினார். வினோபா பாவே காந்தியின் வழிகாட்டியால் அமைத்த 'சர்வோதய இயக்கம்" இன்றும் இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் தொடர்கிறது. இந்தியா முழுவதிலும் ஆச்சிரமங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, கிராமப்பகுதிகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிமனை வசதிகள் வழங்கப்படுகின்றன.

'சுவராஜ்" என்பதற்கு ஹிந்தி மொழியில் 'சுதந்திரம்" என்று பொருள். ஆனால், காந்தியைப் பொறுத்தவரையில் 'சுவராஜ்" கோட்பாடானது, சுதந்திரம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விடவும் கூடுதல் அர்த்தத்தை கொடுக்கிறது. "எம்மை நாமே ஆளுவதற்கு கற்றுக் கொள்ளுதல் சுவராஜ் ஆகும். சுவராஜ் (சுதந்திரம்) என்ற எனது கனவானது. ஒரு ஏழை மனிதனின் சுவராஜை குறிக்கிறது" என்று காந்தி கூறினார். அதனால், காந்தி கிராமிய பொருளாதாரம், உள்ளூர் பொருளாதாரம் என்பவற்றை ஊக்கப்படுத்தினார். ஒவ்வொருவருக்கும் தொழில் செய்வதற்கு வசதியளிக்கப்படுகிறது. இதனால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு முடிகிறது.

தனிநபர்களையும் சமூகங்களையும் அவற்றின் அடி மட்டங்களில் பலப்படுத்தும் பொழுது, தமது சமூகங்களில் பிரதான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் காத்திரமான முறையில் ஈடுபடுவதற்கும் பங்குபற்றுவதற்கும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முரண்பாட்டு மாற்றத்தைப் பொறுத்தவரையில் இது மிக அவசியமானது. இதனை மகாத்மா காந்தி அப்போதே கூறிவிட்டார்.

காந்தியின் சுவதேசி கோட்பாட்டினை நோக்குமிடத்து உள்ளூர் பொருளாதாரம், தேசிய மற்றும் இன உணர்வு, ஒருவருக்கொருவர் உதவுவதை ஊக்கப்படுத்துதல் மற்றும் உள்ளூர் வளங்கள், திறமைகளை கட்டியெழுப்புதல் என்பதையே வெளிப்படுத்துகின்றது. மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்துவதற்கான திறமை மற்றும் மக்களின் பொருளாதாரம் என்பவற்றின் அடிப்படையிலானது இது. சுவதேசி, அதாவது பொருளாதார விவகாரங்களில் சுய ஒழுங்குபடுத்தலை இது குறிக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால், காந்தியின் கொள்கைகள் ஹமுரண்பாடுகளுக்கான தீர்வு' என்ற நவீன மேலைத்தேய கோட்பாட்டின் அடிநாதமாக இருக்கிறது. காந்தியைப் பொறுத்தவரையில், ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகளினூடாக வெறுமனே தீர்வைக் காணுவது அன்றி, சுய புரிதலை எய்துவதும் தான். ஹவாழ்க்கையில் ஒருமைப்பாடே' அவரது அடிப்படை.

அகிம்சையானது மிகவும் பலம்மிக்கதொன்று. இந்த பலத்தின் பின்னால் இருப்பது ஆயுதம் அல்ல, அது மக்களாதரவு. முரண்பாடு பற்றிய மரபு சார்ந்த சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு அடிப்படை விலகலை சமூக போராட்டத்திற்கான அகிம்சை அணுகுமுறை' பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பொது மக்களின் அங்கீகாரத்தின் மீதே ஆட்சியாளர்களின் அதிகாரம் சார்ந்திருக்கின்றது என்ற யதார்த்தத்தின் அடிப்படையிலேயே அகிம்சைப் போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. சமூக போராட்டத்திற்கான ஒரு தொழில்நுட்பமான, அகிம்சையுடன் தொடர்புபட்ட ஒத்துழையாமையானது, மகாத்மா காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் பரிச்சயமானது. "மனித குலத்தின் பயன்பாட்டிற்காக கிடைப்பவைகளில் உயர்வானது அகிம்சை. மனிதனின் புத்தி சாதுரியத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட அழிவு ஆயுதங்களின் பலத்தை விடவும் இது பலமானது" என்று காந்தி அகிம்சை பற்றிக் கூறியிருந்தார்.

<strong>முதல் பக்கம்...</strong>முதல் பக்கம்...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X