For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியாவில் 7 நாட்கள் லாக்டவுன்? பரவும் தகவல் உண்மையா?

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவில் பிஎப் 7 வகை கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிரதமர் மோடி கடந்த 24 ஆம் தேதி அவசர ஆலோசனை நட்த்தினார். இதை வைத்து இந்தியாவில் ஒரு வாரத்திற்கு லாக்டவுன் போடப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இந்த தகவலுக்கு மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

சீனாவை புரட்டிப்போட்டுள்ள பிஎப் 7 வகை கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன.

குறிப்பாக இந்தியாவில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

 ஆட்டம் காட்டும் கொரோனா BF7! மறுபடியும் செட்டப்பை மாத்தனுமா? வருமா அடுத்த அலை? நிபுணர்கள் சொல்வதென்ன? ஆட்டம் காட்டும் கொரோனா BF7! மறுபடியும் செட்டப்பை மாத்தனுமா? வருமா அடுத்த அலை? நிபுணர்கள் சொல்வதென்ன?

 கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற

கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற

மீண்டும் ஒரு கொரோனா பரவல் ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் சில கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துள்ளன. அதாவது சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தும் முறை தொடங்கியிருக்கிறது. அதேபோல் மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிசிஆர் பரிசோதனை வேண்டும்

பிசிஆர் பரிசோதனை வேண்டும்

மருத்துவமனைகளிலும் தயார் நிலைகளை ஏற்படுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 22 ஆம் தேதி டெல்லியில் அவசர ஆலோனை நடத்திய பிரதமர் மோடி கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அதேபோல், சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

எதிர்ப்பு சக்தி இல்லாத காரணம்தான்

எதிர்ப்பு சக்தி இல்லாத காரணம்தான்

இதனை பின்பற்றி சென்னை உள்பட சர்வதேச விமான நிலையங்களில் இந்த பரிசோதனை தொடங்கியுள்ளது. சீனாவில் பரவிய அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்றும் இந்திய மக்களுக்கு ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் மந்தை எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாகவும் சீனாவில் மக்களுக்கு இந்த எதிர்ப்பு சக்தி இல்லாத காரணம்தான் அங்கு கொரோனா பரவுவதற்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

 சீனாவில் இருந்த வந்தவருக்கு கொரோனா

சீனாவில் இருந்த வந்தவருக்கு கொரோனா

இதற்கு மத்தியில், நேற்று சீனாவில் இருந்து உத்தர பிரதேசம் வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் இந்தியாவிலும் இந்த கொரோனா பரவி விடுமோ என்ற தகவல்களும் வேகமாக பரவ தொடங்கியது. அதே நேரத்தில் கொரோனா விவகாரம் குறித்த பல்வேறு தகவல்களும் உலா வரத்தொடங்கியிருக்கின்றன. பல போலி தகவல்களும் பரவி மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

 7 நாட்கள் பொதுமுடக்கம்

7 நாட்கள் பொதுமுடக்கம்

அந்த வகையில் மீண்டும் இந்தியாவில் 7 நாட்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றின் ஸ்க்ரீன் ஷாட் போலியாக தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விடப்பட்டது. இதை உண்மை என நம்பிய பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மக்கள் மத்தியில் தேவையற்ற பரபரப்பு ஏற்பட்டது. பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்திய சில மணி நேரங்களில் இப்படி ஒரு ஸ்க்ரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. இதையடுத்து மத்திய அரசின் பிஐபி ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை மறுத்து பதிவிடப்பட்டுள்ளது.

Fact Check

வெளியான செய்தி

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 7 நாட்கள் பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட இருப்பதாக பிரதமர் மோடி கடந்த 24 ஆம் தேதி நடத்திய அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு யூடியூப் சேனல் ஒன்றின் செய்தி என

முடிவு

சமூக ஊடகங்களில் பரவிய அந்த தகவல் முற்றிலும் தவறானது. இந்தியாவில் பிஎப் 7 வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கம் உள்பட கட்டுப்பாடுகள் தொட

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
As the PF7 type of corona virus is spreading in China at lightning speed, precautionary measures have been stepped up in India. Prime Minister Modi held an emergency meeting on the 24th. Due to this, information spread on social media that India is going to be locked down for a week. The PIP of the central government has explained this information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X