Gold Rate Today: காலை சவரனுக்கு ரூ 560 குறைந்த தங்கம் விலை! சென்னையில் மாலையில் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 2) சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் ரூ 87,040-க்கு விற்பனையான நிலையில் தற்போது மாலையில் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,950-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ 164-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,64,000 ஆகும். இது போல் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை மாற்றங்களை கண்டு வருகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.
அக்டோபர் 2 ஆம் தேதியான இன்று காலை கிராமுக்கு ரூ 70 குறைந்து ஒரு கிராம் ரூ 10,880-க்கும், சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் ரூ 87,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாலையில் சவரனுக்கு ரூ 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ 87,600-க்கும் ஒரு கிராம் ரூ 10,950-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில்தான் ஒரே நாளில் இரு முறை மாற்றம் என்றால் வெள்ளியின் விலையிலும் காலை ரூ 3 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ 1 உயர்ந்துள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ 4 உயர்ந்துள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்று விஜயதசமி விழாக் கொண்டாடப்படும் நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் விஜயதசமிக்கும் தங்க மார்க்கெட்டிற்கும் சம்பந்தம் இல்லாவிட்டாலும் நல்ல நாளில் விலை குறைந்துள்ளது மக்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025- ஒரு சவரன் ரூ. 86,880
29.09.2025- ஒரு சவரன் ரூ. 85,600
28.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120
27.09.2025- ஒரு சவரன் ரூ. 85,120
26.09.2025- ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025- ஒரு சவரன் ரூ.84,080
24.09.2025- ஒரு சவரன் ரூ.84,800
23.09.2025- ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025- ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications