தாறுமாறாய் தவிக்க வைக்கும் தங்கம்! இந்தியாவில் மட்டும் இத்தனை டன்னா? ஒரு வீட்டில் எவ்வளவு வைக்கலாம்?
சென்னை: தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனr. அதே நேரத்தில் இந்தியாவில் ஒருவர் தனது வீட்டில் எவ்வளவு தங்கத்தை வைத்து இருக்கலாம் என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா? அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஒரு உலோகமல்ல. அது கலாசாரம், பாரம்பரியம், பாதுகாப்பு, முதலீடு என பல அர்த்தங்களை கொண்டது. தங்கம் வாங்குவது, அணிவது, வீட்டில் சேமிப்பது என்பவை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கமாக உள்ளது.
திருமணம், பண்டிகை, பிறப்பு, சுப நிகழ்ச்சிகள் என எந்த முக்கிய தருணமாக இருந்தாலும் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் தங்க நகைகள் பெண்களின் அழகுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை.

தங்கம்
அது பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு என்றே பார்க்கப்பட்டது. காலப்போக்கில் நகைகளின் வடிவங்கள் மாறினாலும், தங்கத்தின் மதிப்பும் முக்கியத்துவமும் குறையவில்லை. இன்றும் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாகவே மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களிடம் தங்கம் பாதுகாப்பாக வைத்திருக்கும் பழக்கம் தொடர்கிறது. இதற்கு ஆதாரமாக, உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளி விவரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. உலகம் முழுவதும் உள்ள தங்க கையிருப்பில் சுமார் 11 சதவீதம் தங்கம் இந்திய பெண்களிடமே இருப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தங்கம் சட்ட விதி
எண்ணிக்கையில் சொல்வதானால், இந்திய பெண்களிடம் கிட்டத்தட்ட 24 ஆயிரம் டன் தங்க நகைகள் கையிருப்பில் உள்ளன. இதைவிட சுவாரசியமான தகவல் என்னவென்றால், உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளின் மொத்த தங்க கையிருப்பைக் காட்டிலும், இந்திய பெண்களிடம் இருக்கும் தங்க நகைகளின் அளவு அதிகம். அமெரிக்கா சுமார் 8 ஆயிரம் டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷியா 1,900 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கின்றன.
24 ஆயிரம் டன் தங்கம்
ஆனால் இந்திய பெண்களிடம் மட்டும் 24 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுவது, இந்தியாவில் தங்கத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக காட்டுகிறது. இவ்வளவு தங்கம் வைத்திருக்கிறோமே, இது சட்டப்படி சரியா? ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்ற கேள்வி பலருக்கும் நீண்ட நாட்களாக உள்ளது. இதற்கு வருமான வரித்துறை தெளிவான விளக்கத்தையும் வழங்கியுள்ளது. உண்மையில், ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கிறார் என்பதற்காகவே வருமான வரித்துறை கேள்வி எழுப்புவதில்லை.
எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்
ஆனால் அந்த தங்கம் வாங்கப்பட்ட வருமானத்தின் ஆதாரம் என்ன, அந்த வருமானம் கணக்கில் காட்டப்பட்டுள்ளதா என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள். பாரம்பரியமாக கிடைத்த நகைகள் என்றால், அதற்கான குடும்ப பின்னணி, பழைய ஆவணங்கள் போன்றவை முக்கியமாகின்றன. சட்டப்படி ஒரு திருமணமான பெண் அதிகபட்சமாக 500 கிராம் வரை தங்க நகைகள் வைத்திருக்கலாம். திருமணமாகாத பெண் என்றால் 250 கிராம் வரை வைத்திருக்கலாம். ஆண்கள் அதிகபட்சமாக 100 கிராம் வரை தங்கம் வைத்திருக்க அனுமதி உள்ளது.
தங்கம் வரம்பு
இதன் அடிப்படையில், திருமணமான தாய், திருமணமாகாத மகள் மற்றும் ஒரு ஆண் உறுப்பினர் கொண்ட குடும்பத்தில் சுமார் 850 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம் என்பது ஒரு பொதுவான கணக்காக சொல்லப்படுகிறது. இவை எல்லாம் ஒரு தோராய வரையறைகளே. ஒருவர் வீட்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு, அவர்களின் வருமானத்திற்கு ஏற்றதாக இருந்தால் எந்த சட்ட சிக்கலும் இல்லை. இதற்கும் அதிகமாக தங்கம் வைத்திருப்பது சட்டவிரோதம் அல்ல. ஆனால் அதற்கான வருமானத்தை சரியான முறையில் கணக்கில் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications