10, 12-ம் வகுப்பு முடித்தவர்களா? மத்திய அரசில் டேட்டா என்ட்ரி பணி-‛வாங்க’ என அழைக்கும் ‛பிஇசிஐஎல்’
டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிஇசிஐஎல் எனும் பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (Broadcast Engineering Consultants India Limited அல்லது BECIL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் என்ன?
பிஇசிஐஎல் நிறுவனத்தில் 3 பிரிவுகளில் மொத்தம் 20 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி மல்டி டாஸ்க் ஸ்டாப் (எம்டிஎஸ்) பணிக்கு 10 பேர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 6 பேர், மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் பணிக்கு 4 பேர் என மொத்தம் 20 பேர் அவுட்சோர்சிங் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 10ம் வகுப்பும், டேட்டோ என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 12ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் பணியை விரும்புவோர் மெடிக்கல் லேபாரட்டரி சயின்ஸ் அல்லது மெடிக்கல் லேபாராட்டரி டெக்னாலஜிஸ்ட் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,614 முதல் ரூ.21,970 வகை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதன்படி எம்டிஎஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.16,614 சம்பளமாகவும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு ரூ.20,202ம், மெடிக்கல் லேப் டெக்னாலஜிஸ்ட் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.21,970ம் மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.becil.com இணையதளம் சென்று ஜனவரி 11ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக பொது, ஓபிசி, முன்னாள் ராணுவவீரர்கள், பெண்களுக்கு ரூ.885 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ், பிஎச் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.531 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிய Click Here
பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications