For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2,826 பணிகள்.. கைநிறைய சம்பளம்.. 12 முடித்தாலே போதும்..பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் வேலை!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள 2,826 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட்டில் வெவ்வேறு பிரிவுகளில் மொத்தம் 2826 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கைநிறைய சம்பளத்துடன் இந்த பணியை பெற 12 மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பசு வளர்ப்பை ஊக்கப்படுத்தி பால் வர்த்தகத்தை அதிகரிக்கும் முனைப்பில் பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் செயல்பட்டு வருகிறது. பால் உற்பத்தியை அதிகரித்தல், செயற்கை கருவூட்டலை ஊக்குவித்தல், சுகாதாரம், நோய் தடுப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி பால் புரட்சியை ஏற்படுத்தும் பணி தான் இதன் நோக்கமாக உள்ளது.

இந்நிலையில் தான் பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

 பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் திருவள்ளுவர்- பாரதிய கலாசாரத்தை வடிவமைத்த திருக்குறள்: ஆளுநர் ரவி பாரதிய முனிவர்களுள் உச்சத்தில் திருவள்ளுவர்- பாரதிய கலாசாரத்தை வடிவமைத்த திருக்குறள்: ஆளுநர் ரவி

 காலியிடம் எவ்வளவு?

காலியிடம் எவ்வளவு?

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட்டில் மொத்தம் 5 பிரிவுகளில் 2,826 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி சென்ட்ரல் சூப்பிரண்டு பணிக்கு 314 பேர், அசிஸ்டென்ட் சென்ட்ரல் சூப்பிரண்ட் பணிக்கு 628 பேர், ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு 314 பேர், டிரெய்னர் பணிக்கு 942 பேர், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 628 பேர் என மொத்தம் 2,826 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

ஒவ்வொரு பணியை பொறுத்து கல்விதகுதி என்பது வேறுபடுகிறது. அதன்படி சென்ட்ரல் சூப்பிரண்டு மற்றும் டிரெய்னர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். அசிஸ்டென்ட் சென்ட்ரல் சூப்பிரண்டு, ஆபிஸ் அசிஸ்டென்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்க 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

சென்ட்ரல் சூப்பிரண்டு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அசிஸ்டென்ட் சென்ட்ரல் சூப்பிரண்டு, ஆபிஸ் அசிஸ்டென்ட் , டிரெய்னர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணியை விரும்புவோர் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

 மாத சம்பளம் எவ்வளவு?

மாத சம்பளம் எவ்வளவு?

சென்ட்ரல் சூப்பிரண்டு பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். டிரெய்னர் மற்றும் அசிஸ்டென்ட் சென்ட்ரல் சூப்பிரண்டு பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.12 ஆயிரம், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

 விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்ட்ரல் சூப்பிரண்டு பணிக்கு ரூ.945, அசிஸ்டெண்ட் சென்ட்ரல் சூப்பிரண்ட் பணிக்கு ரூ.828, ஆபிஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ரூ.708, டிரெய்னர் பணிக்கு ரூ.591, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு ரூ.472 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்ப்டடுள்ளது.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://bharatiyapashupalan.com/ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 5ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு மற்றம் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

English summary
Bharatiya Pashupalan Nigam Limited has released a notification to fill a total of 2826 vacancies in different departments. The notification said that candidates who have completed 12th and degree can apply for this job with a generous salary.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X