10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. ரூ.48,000 மத்திய அரசு வேலை.. கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்
டெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மின் ஆராய்சி நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள், பட்டதாரி, என்ஜினீயர்கள் என அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக அதிகப்பட்சம் ரூ.48 ஆயிரம் வரை கிடைக்கும்.
மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனம் (Central Power Research Institute அல்லது CPRI) செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அறிவிப்பின் முக்கிய அம்சங்களை பார்த்து தகுதி, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அதன் விபரம் வருமாறு:

காலியிடம் எவ்வளவு?
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் மொத்தம் 5 பிரிவுகளில் 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Engineering Officer Gr.1 பணிக்கு 20 பேர், Scientific /Engineering Assistant பணிக்கு 7 பேர், Technician Gr.1 பணிக்கு 15 பேர், Assistant Gr. II பணிக்க 16 பேர், MTS Grade 1(Watchman) பணிக்கு 7 பேர் என மொத்தம் 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த பணிகளுக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி, டிப்ளமோ, ஐடிஐ, பிஏ, பிகாம், பிபிஏ, பிபிஎம், 10, பிளஸ் 2 முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோரின் வயது என்பது அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது தளர்வுகளும் உண்டு.

மாத சம்பளம் எவ்வளவு?
Engineering Officer Gr.1 பணிக்கு மாத சம்பளமாக ரூ.44,900 கிடைக்கும். Scientific /Engineering Assistant பணிக்கு ரூ.35,400, Technician Gr.1 பணிக்கு ரூ.19,900, Assistant Gr. II பணிக்கு ரூ.25,500, MTS Grade 1(Watchman)பணிக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்பவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய நவம்பர் 21ம் தேதி கடைசிநாளாகும். அன்றைய தினம் மாலை 5 மணி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணி தொடர்பாக கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here கிளிக் செய்யலாம். ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here கிளிக் செய்யலாம்.
-
சேலம் மாவட்டத்தில் வேலை.. 197 காலியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு முடிச்சவங்க விட்றாதீங்க! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை












Click it and Unblock the Notifications