மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 10, ஐடிஐ முடிச்சவங்க அப்ளை பண்ணலாம்.. செம சான்ஸ்
சென்னை: பொதுத்துறை நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளம் (CSL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 260 அப்ரெண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணபிக்க முடியும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.23 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
கொச்சின் கப்பல் கட்டும் தளம் (CSL) கேரள மாநிலம் கொச்சியில் உள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் கப்பல் கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது.

பணியிடங்கள் விவரம்:
பொதுத்துறை நிறுவனமான இதில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது 260 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஷீட் மெட்டல் பணியாளர் - 64
வெல்டர் - 49
ஃபிட்டர் - 39
எலக்ட்ரீஷியன் - 21
மெக்கானிக் டீசல் - 16
மெக்கானிக் மோட்டார் வாகனம் - 16
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 13
பெயிண்டர் - 11
மெஷினிஸ்ட் - 10
கிரேன் ஆபரேட்டர் - 06
இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் - 06
பிளம்பர் - 05
ஷிப் ரைட் மரம் - 04 என மொத்தம் 200 பயிற்சி பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு மற்றும் துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 45 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
மூன்று ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு மாதம் ரூ.23,300 சம்பளம் அளிக்கப்படும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.02.2026 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://cochinshipyard.in/uploads/career/3f42ff72495098e71dc62d9c0fb409a4.pdf
-
அதிகாலை 6 மணிக்கு மெயில்! 12,000 இந்திய ஊழியர்கள் பணி நீக்கம்! ஷாக் கொடுத்த ஐடி நிறுவனம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
ஒரே நாளில்.. அப்படியே ஸ்டன் ஆன ஊழியர்கள்.. எத்தனை வருட ஏக்கம்.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications