Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிக வந்தால் மகிழ்ச்சிதான்... மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

கோவை: திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம். அதேசமயம், கூட்டணி குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கலந்துரையாடல் நடந்தது. அதில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். அப்போது திருச்சி திமுக மாநில மாநாட்டுக்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கி அழைப்பு விடுத்தார்.

Stalin consoles mother, daughter duo who met with accident near Coimbatore

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், திமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி. திமுகவுடன் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியது தேமுதிகதான் என்று தெரிவித்தார்.

தாய் மகளுக்கு இரங்கிய ஸ்டாலின்

முன்னதாக கோவை செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கித் தவித்த தாய் மற்றும் அவரது மகளுக்கு ஆறுதல் கூறி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின் காரில் கோவைக்கு வந்து கொண்டிருந்தபோது, வழியில், வழியில் ஒரு சாலை விபத்தில் சிக்கி தாய், மகள் தவித்ததைப் பார்த்து தனது காரை நிறுத்தச் சொல்லி அவர்களிடம் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு பின்னர் கிளம்பிச் சென்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+