மாயமான விமானத்தில் இருந்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல்
சென்னை: சென்னையில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஏ ஏ.என்.32 என்ற விமானம் மாயமானது. இதில் பயணம் செய்த 29 பேரில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை தாம்பரம் விமானபடைத் தளத்தில் இருந்து இன்று காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானத்தை காணவில்லை. ஏ.என்.32 என்ற அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது காலை 8.30 மணியளவில் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, பதட்டமடைந்த அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர். விமானத்தை தேடும் பணியில் மேலும் 4 டார்னியர் ரக விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அந்த விமானத்தில், 6 விமானிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் 4 பேர் பயணித்துள்ளனர். 11 விமானப்படை அதிகாரிகள், 8 கடற்படை வீரர்களும், மாயமான விமானத்தில் சென்றுள்ளன.
இந்நிலையில், மாயமான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 12 பேர் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சம்பா மூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, சின்னா ராவ் உள்ளிட்ட 8 பேர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே தேடுதல் பணியில் உதவுமாறு இலங்கை, மலேஷியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications