ராமஜெயம் கொலை- குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்துங்க-ரவுடியின் வக்கீல் கோரிக்கையால் பரபரப்பு!
திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலை தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் முதலில் விசாரணை நடத்த வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திமுகவின் முகமாக அமைச்சர் கே.என்.நேரு கோலோச்சிய காலத்தில் அவருக்கு அனைத்துமாக செயல்பட்டவர் அவரது சகோதரர் கே.என்.ராமஜெயம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயணம் சென்ற போது மர்மநபர்களால் ராமஜெயம் கடத்தப்பட்டார்.
பின்னர் திருச்சி அருகே கல்லணை சாலையில் கை கால்கள் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டு கிடந்த நிலையில் ராமஜெயத்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. ராமஜெயத்தின் படுகொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமஜெயம் படுகொலை வழக்கானது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் ராமஜெயம் படுகொலை வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதற்காக அந்த 12 ரவுடிகளுக்கும் போலீசார் நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பி இருந்தனர்.

ரவுடிகள் ஆஜர்
இதையடுத்து மோகன்ராம், தினேஷ் ,நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவ குணசேகரன் ஆகியோர் திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஹைகோர்ட் உத்தரவு சொல்வது என்ன?
இதன் பின்னர் மோகன் ராம் என்பவரது வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உண்மை கண்டறியுன் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி தான் கோர முடியும் என உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது. அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டி.எஸ்.பி தான் அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும் வரும். 7 ஆம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் விசாரிங்க..
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஏன் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை? ராமஜெயம் மது அருந்தும் பழக்கம் இல்லாதவ என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications