மன்கிபாத் வானொலி: ஓமிக்ரான் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
மன்கிபாத் வானொலி: ஓமிக்ரான் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
Recommended Video
டெல்லி: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

422 பேருக்கு ஓமிக்ரான்
இந்தியாவில் தற்போதைய நிலையில் 76,766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 422.

பிரதமர் மோடி உரை
நாட்டில் ஓமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையில், ஓமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த அச்சம் வேண்டாம். ஓமிக்ரான் பரவலை எதிர்கொள்ள நாடு தயார் நிலை உள்ளது. அத்துடன் ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்; ஜனவரி 10-ந் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். உலகிலேயே இந்தியாவில்தான் உலகில் முதலாவது டி.என்.ஏ. கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல் மூக்கு வழியாக தடுப்பூசி செலுத்தும் முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறியிருந்தார்.

மோடி உரை முக்கியமான அம்சங்கள்
பிரதமர் மோடி திடீரென இன்னும் 15 நிமிடத்தில் உரையாற்றப் போகிறேன் என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி, லாக்டவுன் அறிவிப்பை வெளியிடுவாரோ என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது. இருந்தபோதும் ஓமிக்ரான் குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமது நாடு எந்தந்த வகையில் தயார் நிலையில் உள்ளது என்பதை பிரதமர் மோடி விளக்கி இருந்தார்.

மன்கிபாத் வானொலி உரை
இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது இந்த ஆண்டின் கடைசி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி. இதில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலை இந்தியா ஒரு குடும்பமாக எதிர்த்து நிற்கிறது. ஓமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதில் இந்தியா மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications