சேட்டைகளும் பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும் அழுகையும் கூட அழகுதான் குழந்தைகளிடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதை யொட்டி சமூகவளைதளங்களிலும் வாழ்த்துக்கள் பரிமாறப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எத்தனை வயதானாலும் நம்முள் ஒளிந்திருக்கும் குழந்தத்தனமும் நெருக்கமானவர்களிடம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். அதை மெய்ப்பிக்கும் வகையில் இளைஞர்களும் இளம்பெண்களும் தங்களை குழந்தைகளாக பாவித்து சமூக வலைதளங்களில் குழந்தைகள் தின வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அவற்றில் சில..

செல்லக்கோபமும்

சேட்டைகளும்
பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும்
அழுகையும் கூட அழகுதான்
குழந்தைகளிடம்...

அடியோடு மறையவும்..

அனைத்து குழந்தைகளும்
பெற்றோருடன் சேர்ந்திருக்கவும்,
அனாதை இல்லங்கள்
அடியோடு மறையவும்.,
இந்நன்னாளில்
இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்..!

குழந்தை உள்ளம் கொண்ட..

ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகது
பாப்பா...
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை
வையாதே பாப்பா...
"மழலைகளுக்கும்
குழந்தை உள்ளத்தோடு
இருக்கும் பெரியவர்களுக்கும்"

குழந்தைகளை கொண்டாடுவது!

இன்று குழந்தைகள் தினம்!
குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்!
தினங்களைக் கொண்டாடுவதை விட முக்கியமானது குழந்தைகளைக் கொண்டாடுவது!

சுதந்திரமாக விடுங்கள்

வீட்டிற்குள்ளே அடைத்து வைக்காமல் சுதந்திரமாக வாழ விடுங்கள் குழந்தைகளை.
அவர்களின் மகிழ்ச்சியே நமக்கு பேரானந்தம்
#நான்_அனுபவித்தது (தை) அவர்களும் அனுபவிக்கட்டும்

இன்னும் எத்தனை நாளைக்கு

கால காலத்துல கல்யாணம் ஆகிருந்தா இந்நேரம் என்னோட குழந்தையோட குழந்தைகள் தினம் கொண்டாடி இருந்திருப்பேன்...
இன்னும் எத்தனை நாளைக்கு தான் நானும் குழந்தைன்னு சொல்லி மனச தேத்திட்டு இருப்பேனோ..

மீண்டும் ஒரு ஜென்மம்

மீண்டும் ஒரு ஜென்மம் கிடைக்குமாயின் அதில் அருதினமும் குழந்தையாகவே வாழ்ந்திட முனைகிறேன்..
வளர்ந்துவிட்டால் இந்த உலகில் பொய்யாகவும், போலியாகவும் நடிக்க வேண்டியதாயிருக்கும்..
அடுத்தவருக்காகவே நம் குணங்களை மறந்தவறாக வாழ்ந்திட நேரிடும் என்பதால்..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Children's day celebrates today throught the nation. Netizens sharing their children's day wishes on Social media.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற