உண்மை, உழைப்பு, உயர்வு... சரவணா ஸ்டோர்ஸ் வாசகமாச்சே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். இதற்காக அவர் புதிய இணையதளம் தொடங்கி இருக்கிறார்.

அதில் தனது ரசிகர்களையும், கட்சியில் சேர விரும்புபவர்களையும் இணையும் படி அழைத்து இருக்கிறார். நேற்றில் இருந்து அவரது ரசிகர்கள் பலரும் இதற்காக அவர் இணையத்தில் பெயர் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த இணையதள லோகோவில் இருக்கும் உண்மை, உழைப்பு, உயர்வு என்ற வாசகமும் பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையின் வாசகமும் ஒன்று என்று சர்ச்சை எழுந்துள்ளது.

ரஜினி மந்திரம்

ரஜினி மந்திரம்

ரஜினியின் இணையதளமான 'www.rajinimandram.org' என்பதில் தான் இந்த வாசகம் இடம்பிடித்து இருக்கிறது. இதில் இருக்கும் பாபா லோகோவிற்கு கீழ் 'உண்மை உழைப்பு உயர்வு' என்று வட்டமாக இடம்பெற்று இருக்கிறது. மேலும் அதை சுற்றி ஒரு பாம்பு இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் லோகோ

சரவணா ஸ்டோர்ஸ் லோகோ

ரஜினி இணையத்தில் இருக்கும் வாசகம் போலவே சரவணா ஸ்டோர்ஸ் வாசகமும் இருக்கும். இந்த பிரபல கடை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இதன் வாசகமும் 'உண்மை உழைப்பு உயர்வு' என்பதுதான். மேலும் அதிலும் இதே போல் வாசகம் வளைந்து காணப்படும்.

இது அதுல்ல

இந்த இரண்டு வாசகமும் ஒரே மாதிரி இருப்பதால் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். இவர் பேஸ்புக்கில் ''உண்மை, உழைப்பு, உயர்வு, இதுவே என் மந்திரம் - ரஜினி. இது சரவணா ஸ்டோர்ஸ் tag லைன் ஆச்சே🤔'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இது என்னோடது

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் இதை பார்த்துவிட்டு பதில் அளிப்பதை போல இவர் சித்தரித்து போஸ்ட் போட்டுவுள்ளார். அதில் ''உண்மை.. உழைப்பு.. உயர்வு.. இதுவே மந்திரம் - ரஜினி. சரவணா ஸ்டோர் அண்ணாச்சி: ஆ.. இது என் டயலாக் ஆச்சே..! '' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini's new website ''www.rajinimandram.org'' has lot of important things. The logo has derived from the 'Ramakrishna Math' logo. The baba symbol may be his new party symbol. At the same time Rajini has uses the same slogan of a textile company which is Unami Ulaippu Uyarvu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X