'தமிழினத் துரோகி சுப்ரமணியசுவாமியை உடனடியாக கைது செய்க!' - வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை: தமிழக அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று கூறி வரும் சுப்ரமணியசுவாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு மற்றும் ஈழம் வாழ் தமிழர்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்து மிகச் சரியான போற்றுதலுக்குரிய நகர்வுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாட்டு அரசை தீவிரவாதிகளின் நண்பன் என்று தமிழினத் துரோகி சுப்பிரமணியசுவாமி விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியின் சிங்களக் கூட்டாளியான இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்களை தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திலேயே நிறைவேற்றி தமிழினத் துரோகிகளையும் எதிரிகளையும் நடுங்க வைத்தவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
தற்போது, சொட்டு நீரும் அருந்தாமல் அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து இன்னுயிரை ஈந்த தியாக தீபமாம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ்நாட்டு அரசு அனுமதி கொடுத்துவிட்டதாம். அதனாலேயே தமிழ்நாட்டு அரசு தீவிரவாதிகளின் நண்பனாகிவிட்டது என்று தமது ட்விட்டர் பக்கத்தில் இறுமாப்புடன் எழுதுகிறான் துரோகி சுப்பிரமணிய சுவாமி.
தமிழக மீனவர்களை சிங்கள பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுத்த சுப்பிரமணிய சுவாமி மீது ஒட்டுமொத்த தமிழ்நாடே கடும் கோபத்தில் இருக்கிறது!
தமிழ்நாட்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக இலங்கையுடன் நட்பு பாராட்டிக் கொண்டு தமிழ்நாட்டின் சட்டவிரோதியாக மாறிவிட்ட சுப்பிரமணிய சுவாமி தமிழகத்திலே நுழையவே கூடாது என்று அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், படைப்பாளிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தடையும் விதித்துள்ளது.
இப்படி தமிழ்நாட்டு அரசையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் உலகத் தமிழர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தும் தமிழினத் துரோகி சுப்பிரமணிய சுவாமி டெல்லியில் பதுங்கிக் கொண்டு வாலாட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால் அது இனியும் நடக்காது என்று எச்சரிக்கிறோம்.
இந்த தமிழ்நாட்டின் சட்டவிரோதியான சுப்பிரமணிய சுவாமியை தமிழ்நாடு அரசு உடனே கைது செய்து சிறையில் அடைப்பதுதான் சரியான பதிலடியாக இருக்கும். ஆகையால் தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications