இந்தியாவில் 1% பேர் கையில் 22% வருமானம்: 50% மக்கள் 13% வருமானம் ஈட்டுகின்றனர்: ஆய்வறிக்கை தகவல்
இந்தியாவில் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துள்ளதும், கொரோனா பேரிடர் வசதியுள்ளவர்கள், ஏழைமக்கள் இடையேயான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது, நாட்டின் அதிகபட்ச வருமானம் 10% மக்களிடமும், 1 % மக்கள் அதில் 22% வருமானத்தை பெற்றுள்ளதையும் உலக சமத்துவமின்மை-2022 ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக சமத்துவமின்மை -2022 அறிக்கை
கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் அதன் தொடர்ச்சியாக 2021-ல் கொரோனா 2 வது அலை ஆகியவற்றினால் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவில் தனிநபர் வருமானம், தேசிய வருமானத்தில் மக்களின் பங்கு குறித்து "உலக சமத்துவமின்மை அறிக்கை" 2022 என்ற தலைப்பில் உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின் நிர்வாகி லூக்காஸ் சான்செல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை உலகளவில் பல்வேறு பொருளாதார நிபுணர்கள், ஃபிரான்ஸ் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி உள்ளிட்டோர் சேர்ந்து ஆய்வு செய்து தயாரித்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

சராசரி ஆண்டு வருமானம் குறைந்தது
உலகளவில் மக்களிடையே சமத்துவமின்மை அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் சம்பாதிக்கும் திறன் பெற்றவர்களின் சராசரி ஆண்டு வருவமானம் ரூ.2 லட்சத்து 4200 ஆக இருக்கிறது. மக்கள் தொகையில் 50 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் வெறும் ரூ.53,610 ஆக உள்ளது. ஆனால், 10% இந்தியர்கள் 20 மடங்கு அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்கள், அதாவது அவர்களது ஆண்டு வருமானம் ரூ.11 லட்சத்து 66 ஆயிரத்து 520 ஆக உள்ளது.

10% மக்கள் கையில் 57 சதவீத வருமானம்
ஒட்டுமொத்த இந்தியாவின் மக்கள் தொகையில் 10% மக்கள் 57% சதவீதம் வருமானத்தையும் அந்த 10% சதவீத மக்களில் உள்ளடங்கியுள்ள 1% சதவீத மக்கள் 22% வருமானத்தையும் சம்பாதித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மீதமுள்ள 50% மக்களிடம் வெறும் வெறும் 13% மட்டுமே உள்ளது.
இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமதத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாகத் தெரியும் நாடாகவும் இருந்து வருகிறது. இந்திய மக்களின் சராசரி குடும்பச் சொத்து ரூ.9,83,010 ஆக இருக்கிறது.

தாராளமயமாக்கல் கொள்கையால் சமத்துவமினமை அதிகரிப்பு
கடந்த 1980 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடு நீக்கம், தாராளமயமாக்கள் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டபின், உலகளவில் மக்களிடையே சொத்து சேர்ப்பது, வருமானம் பார்ப்பதில் பெரும் சமத்துவமின்மை காணப்படுகிறது.

பெண் ஊழியர்கள் சராசரி வருமானம் இந்தியாவில் குறைவு
பாலின சமத்துவமின்மையும் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. பெண் ஊழியர்களின் வருமான சராசரி என்பது 18% ஆக இந்தியாவில் இருக்கிறது. ஆனால் (21% சீனாவைத் தவிர்த்து ) ஆசியாவில் இது மிகக் குறைவான சராசரி ஆகும். உலகளவில் இந்த சதவீதம் மிகக்குறைவு. மத்திய கிழக்கு நாடுகளில் பெண் தொழிலாளர்கள் வருமானப் பங்கைவிட (15%) அதிகமாக இருக்கிறது.

பாலின சமத்துவமின்மை அதிகரிப்பு
மத்திய தர வருமானம் உள்ள நாடுகளிலும் இத்தகைய பாலின சமத்துவமின்மை உள்ளது. இது இந்தியா, பிரேசிலில் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளில், சில மிகவும் சமமற்ற நிலை உள்ளது. (அமெரிக்கா போன்றவை), மற்றவை ஒப்பீட்டளவில் சமமாக உள்ளது(ஸ்வீடன் போன்ற நாடுகள்).
"குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலும் இது உள்ளது. சில தீவிர சமத்துவமின்மை (பிரேசில் மற்றும் இந்தியா), ஓரளவு உயர் நிலையில் (சீனா) மற்றும் மிதமான மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அளவு (மலேசியா, உருகுவே) ஆகிய நாடுகள் உள்ளன என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவமின்மை அதிகரிப்பு
இந்த சமத்துவமின்மை சீராக அதிகரிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, இந்தியாவில் சமத்துமின்மை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், ஐரோப்பிய நாடுகள், சீனாவில் சமத்துவமின்மை இருந்தாலும் அது குறைந்த வேகத்தில்தான் அதிகரித்துள்ளது.

உலகமயமாக்களின் 30 ஆண்டுகள்
வர்த்தகம் மற்றும் நிதி உலகமயமாக்கள் நடந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஏற்ற தாழ்வுகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் உச்சத்தில் இருந்ததைப் போலவே இன்றும் அவர்கள் உச்சத்தில் உள்ளனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் ஏழை-பணக்காரர் இடையே ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு-ஆய்வாசிரியர்
ஆய்வை நடத்திய உலக சமத்துவமின்மை -2022 அறிக்கையின் முதன்மை ஆசிரியரான லூகாஸ் சான்சல், "கோவிட் நெருக்கடி செல்வந்தர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது.
"இருப்பினும், பணக்கார நாடுகளில், அரசாங்கத்தின் தலையீடு வறுமையின் அதிகரிப்பைத் தடுத்துள்ளது, ஏழை நாடுகளில் இது இல்லை. இது வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சமூக அரசுகள் செயலபட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications