For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடும்ப அரசியல் நடத்துகிறார் ராமதாஸ் .. வாழப்பாடி

By Staff
Google Oneindia Tamil News

ஆனால், சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் இருக்கிற நியாயம் - அதனுடையகருத்து வெள்ளத்தில் இல்லை என்று தான் கூறத்தோன்றும். ஆள் கடத்தல் செய்தவனுடன் பேரம் பேசுவதா?அல்லது பணிய மறுத்து, நடப்பது நடக்கட்டும் என்று அதிரடி நடவடிக்கையில் இறங்குவதா? - என்று முடிவுசெய்ய வேண்டியது நிர்வாகமே தவிர, நீதிமன்றம் அல்ல.

தன்னுடைய கையாலாகாத் தனத்தின் காரணமாக ஓர் அரசு , இப்படிப்பட்ட நேரங்களில் ஒரு கிரிமினல்பேர்வழியின் காலில் விழுந்து, அவனால் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க முயற்சித்தால் - அது பற்றி தீர்ப்புக் கூறவேண்டியது மக்கள்.

அடுத்த தேர்தல் வருகிற போது, இந்தக் கேவலத்திற்கு பாடம் கற்பிப்பதும், கற்பிக்காததும் மக்கள் இஷ்டம். இந்தக்கேவலத்திற்கு, இந்த அரசு போக வேண்டியதுதான் என்றும் மக்கள் தீர்ப்பளிக்கலாம் ; அல்லது இந்தக் கேவலும்நடந்தாலும்,மற்ற அவலங்கள் பல இந்த ஆட்சியில் தவிர்க்கப்பட்டதால் - இந்த கேவலத்திற்கு தண்டனைவேண்டாம் என்றும் மக்கள் தீர்ப்பு அமையலாம். இது அரசியல் ; சட்டமல்ல.

ஆகையால், கையாலாகாத அரசே! நீ வெளியே போ! என்று கர்நாடக அரசைப் பார்த்து சுப்ரீம் கோர்ட்கூறியிருப்பது, தனது அதிகாரத்தின் எல்லையைத் தாண்டி வந்து, நீதிமன்றம் பேசியுள்ள பேச்சாகவே தெரிகிறது.

இது தவிர, கடந்த எட்டு ஆண்டு கால அக்கறையின்மைக்கு கர்நாடகத்தில் இப்போது பதவியில் உள்ளகிருஷ்ணாவின் அரசு, எப்படி காரணமாக முடியும்? எட்டு ஆண்டுகளாக கிருஷ்ணாவின் அமைச்சரவையா ஆட்சிசெலுத்தியது? பங்காரப்பா, வீரப்ப மொய்லி, தேவ கவுடா, பட்டேல் ... என்று தொடர்ந்து பதவிக்கு வந்தமுதல்வர்களின் அரசுகள் வீரப்பனைப் பிடிப்பதில் அக்கறையின்மையைக் காட்டின என்பதற்காக, கிருஷ்ணாவுக்குடோஸ் விடுவது என்ன நியாயம்?

உச்ச நீதிமன்றத்தின் மற்றொருமொரு கருத்து, சட்டம் - ஒழுங்கு பற்றியது...ராஜ்குமார் விடுவிக்கப்படாவிட்டால்,சட்டம்- ஒழுங்கு பிரச்சனை தோன்றும் என்றால் - அதைக் காக்க வேண்டியதும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியதும் கர்நாடக அரசின் பொறுபபு என்ற வகையிலும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.

உண்மைதான். சட்டம் -ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியதும், மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியதும்மாநில அரசின் பொறுப்பே. ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை பெரிதாக எழுந்து விடாமல் பார்த்துக் கொள்வதும்கூட, மாநில அரசின் பொறுப்பல்லவா?

பிரச்னை வரட்டும், பரவாயில்லை ; அடக்கி விடுவோம் ; பார்க்கிறோம் ஒரு கை என்று செயல்படுவது ஒரு வகை ;பிரச்னை பெரிதாக வந்துவிட்டால், அதை அடக்குவதற்குள் வேறு பல பிரச்னைகள் எழுந்து விடும் ; துப்பாக்கிசூட்டிலிருந்து, மொழிப் பிரச்சனை வரை, பல சிக்கல்கள் எழலாம்.; அதனால் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை பெரிதாகஎழுந்து விடாமல் பார்த்துக் கொள்கிற வழியைத் தேட வேண்டியதுதான் என்று நினைத்துச் செயல்படுவதுமற்றொரு வகை. இதில் எந்த வகையில் செயல்படுவது என்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீர்மானிக்க வேண்டியதுமாநில அரசே தவிர, நீதிமன்றம் அல்ல.

ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். விநாயகர் ஊர்வலம் நடக்கிறது ;

இன்னின்ன வழியாக இந்த ஊர்வலம் போனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ; அதனால் இன்னின்னவழியாகத்தான் இந்த ஊர்வலம் போக வேண்டும் என்று அரசு உத்திரவிடுகிறது ; இதை நீதிமன்றமும் ஏற்கிறது.ஏன்?

அதெல்லாம் முடியாது ; இதென்ன கையாலாகாத்தனம்? எந்த வழியாக வேண்டுமானாலும், விநாயகர் ஊர்வலம்போவது அதை நடத்துபவர்கள் உரிமை ; விநாயகருக்கும், ஊர்வலத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின்கடமை; அதைச் செய்ய முடியாதென்றால். இந்த ஆட்சி வெளியேறி, வேறொரு ஆட்சிக்கு வழி செய்யட்டும் என்று நீதிமன்றம் கூற வேண்டியதுதானே? ஏன் அப்படிக் கூறுவதில்லை? காரணம் சட்டம் - ஒழுங்குபிரச்சனையைத் தவிர்க்க, நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் உரிமை ; அதை நீதிமன்றம் ஏற்கிறது.

வீரப்பன் விவாகாரத்தை பொறுத்தவரையில் - இரு மாநில அரசுகளின் பல ஆண்டு கால அக்கறையின்மைகண்கூடாகத் தெரிகிற விஷயம் ; இப்போது இந்த அரசுகள் வீரப்பன் போடுகிற தாளத்திற்கேற்ப டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் அசிங்கமும், நாடறிந்து நடத்தப்படுகிற கூத்து.

ஆனால், இந்த நீண்ட கால பொறுப்பின்மைக்கும், சமீப கால பேடித்தனத்திற்கும், சரியான தண்டனை ஆட்சிமாற்றமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிற கடமையும், உரிமையும் மக்களுடையது. இது நீதிமன்றத்தின்பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழாமல் பார்த்துக் கொள்வதற்காகவோ - அல்லது பணயக் கைதிகளை ஆபத்தின்றிவிடுவப்பதற்காகவோ - அரசு சில வழிமுறைகளை மேற்கொள்ளும் போது, அந்த வழிமுறைகள் சட்டரீதியானவையா இல்லையா என்று ஆராய்கிற உரிமை நீதிமன்றத்திற்கு உணடு ; பச்சையாகச் சொல்வதானால்,பேரம் நடத்த முடிவெடுப்பதும், பேரம் நடத்துவதும் அரசினுடைய உரிமை ; அந்த பேரம் சட்ட ரீதியானதாஇல்லையா என்று கூறுகிற உரிமை நீதிமன்றத்தினுடையது.

இப்போது நீதிமன்றம் பேரமே கூடாது என்று கூறுவதுதான் ஏற்க முடியாததே தவிர, அந்த பேரத்தின் ஓர்அம்சமான கைதிகள் விடுதலைக்கு அனுமதி மறுப்பது நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட செயலே. அதுமட்டுமல்ல, நீதிமன்றத்தின் இந்த அனுமதி மறுப்பு, இருமாநில அரசுகளிடம் வீரப்பனும் பேசுகிற பேரத்தில், சற்றுகடுமையைக் காட்டவும் கூட, உதவும் ; அது எவ்வளவு தூரம் உதவுகிறது என்பது பேச்சு வார்த்தையில்காட்டப்படுகிற சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

இந்த நமது கருத்துக்கள் பற்றி அபிப்பிராய பேதங்களுக்கு இடமிருக்கலாம் ; ஆனால் ஒரு விஷயம் சர்ச்சைக்குஅப்பாற்பட்ட உண்மை. இப்போதைய கடத்தல் நடந்தது, தமிழகப் பகுதியில். அதனால், நடவடிக்கை எடுக்கிறபொறுப்பு தமிழக அரசினுடையது.

இது மட்டுமல்ல ; இத்தனை வருடங்களாக - அதுவும் கடந்த நான்கரை ஆண்டுகளாக - வீரப்பன் விஷயத்தில்ஆழ்ந்த உறக்கத்தை எய்தி விட்டக் குற்றம் தமிழக அரசினுடையதே. நினைத்த பொதெல்லாம் காட்டிலிருந்துஅழைப்பைப் பெற்று வீரப்பனைச் சந்தித்து திரும்பி, அவனுடைய வீரபிரதாபங்களை மக்களுக்கு பறை சாற்றுகிறபணியைச் செய்து வருபவர் - தமிழக பத்திரிக்கையாளர்.

வீரப்பனைப் பற்றி அவரிடமிருந்து தகவலைப் பெறுவது தமிழக அரசின் பொறுப்பு. அப்படி அவரிடமிருந்தோ,சம்பந்தப்பட்ட கிராமங்களில் உள்ள மக்களிடமிருந்தோ, உருப்படியான தகவல் எதையும் தமிழக அரசினால் பெறமுடியாது என்றால் - அது கர்நாடக அரசின் குற்றமல்ல.

இந்த கோணத்திலிருந்து பார்த்தாலும், இன்றைய கர்நாடக ஆட்சியை சுப்ரீம் கோர்ட் சாடியிருப்பது, ஏற்கக்கூடியதாக இல்லை. இந்த வழக்கில் தமிழக அரசு, நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதால், எல்லாப்பொறுப்பையும் கர்நாடக அரசின் மிதே போட்டு விட முடியுமா?

சுப்ரீம் கோர்ட்டின் கோபம் புரிந்து கொள்ளக் கூடியது ; ஆனால் அந்த கோபம் பாய்ந்த திசை தவறானது ; அந்தகோபத்தில் வெளியிடப்பட்ட வார்த்தைகள் அதீதமானவை.

இது ஒரு புறமிருக்க, ஒரு காட்டு மனிதனால், இந்த நாட்டு சட்டமே அழிக்கப்பட இருந்த நேரத்தில் -கிரிமினல்பேர்வழிகளை விடுதலை செய்வதற்கு அனுமதி தர - இப்போதைக்காவது - மறுத்திருப்பது, சட்டத்தின்மாட்சிமைக்கு சுப்ரீம் கோர்ட் செய்துள்ள சேவை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X