For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் வாழ்வில் அதிர்ஷடக் காற்று வீசும் காற்றாலைகள்

By Staff
Google Oneindia Tamil News

ஆரல்வாய்மொழி:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லல் தொழுதுண்டு பின் செல்பவர் என்றுவிவசாயத்தை பெருமையாக கூறினார் வள்ளுவர். ஆனால் விவாசயத்தைகைவிட்டதால் லாபகரமாக வாழ்வதாக கூறும் அதிசய விவசாயிகள் திருநெல்வேலிபகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில்ஆரல்வாய்மொழிக்கு அருகே அமைந்திருப்பது பழவூர் என்ற கிராமம். ஒரு காலத்தில்இந்த கிராமத்தில் இருந்தவர்கள் வளமாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் பருவமழைதொடர்ந்து பொய்த்து வந்ததால் இவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியானது.

Wind Millஆனால், இப்போது அவர்கள் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீசத்துவங்கி உள்ளது.இதற்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளே காரணம்.

இது குறித்து ஞானதிரவியம் என்ற விவசாயி கூறிகையில், 10 ஆண்டுகளுக்கு முன்புநாங்கள் பட்ட கஷ்டத்தில் இருந்து எங்களுக்கு இப்போது விடுதலை கிடைத்துஉள்ளது.

நான் முன்பு வாழைகளும், நிலக்கடலையும், பயிரிட்டு வந்தேன். இது தவிர எனக்குதென்னந்தோப்பும் இருந்தது. இதன் மூலம் எனக்கு கிடைத்தது குறைவானவருமானம்தான்.

Wind Millஎன் போல்தான் சக விவசாயிகளும் கஷ்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் 1990ம்ஆண்டு காற்றாலைகள் எங்கள் பகுதியில் வரத் தொடங்கின. காற்றாலை மூலம்மின்சாரம் தயாரிக்க இங்கு பல நிறுவனங்கள் வந்தன.

காற்றாலை அமைப்பதற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால், காற்றாலை அமைக்கஎங்களிடம் இடம் கேட்டனர். இதற்கு அவர்கள் அதிக பணமும் தர தயாராக இருந்தனர்.இதனால் நாங்கள் எங்கள் நிலத்தை குத்தகைக்கு தரவும், விற்கவும் தயாராகஇருந்தோம்.

Wind Millபருவமழை பொய்த்து போன காரணத்தால் நாங்கள் பயிரிட முடியாமல் தவித்துவந்தோம். இந் நிலையில் காற்றாலைகள் வந்ததால், தரிசாக கிடந்த 1 ஏக்கர் நிலத்தின்விலை ரூ 500ல் இருந்து ரூ 1,00,000 என்ற அளவிற்கு உயர்ந்தது.

தற்போது இந்த பகுதியில் 3,500 காற்றாலைகள் உள்ளன. உலகத்திலையே அதிககாற்றாலைகள் உள்ள இரண்டாம் இடம் இந்தப் பகுதி தான். இந்த காற்றாலைகள் இந்தபகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கின்றன.

நான் இப்போது காற்றாலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான கான்டிராக்டும்பெற்றுள்ளேன். இப்போது என்னிடம் என் கிராமத்தில் இருக்கும் 100 இளைஞர்கள்பணிபுரிகிறார்கள்.

நான் தற்போது முழுமையாக விவசாயத்தை கைவிட்டு விட்டேன். இதற்காக நான்வருந்தவில்லை. நான் விவாசயத்தை விட்டுவிட்டேன் என்றார்.

பல வருடங்களுக்கு முன் இந்த பகுதியில் சாலைகளோ,பள்ளிகளோ, மின்சாரமோகிடையாது. ஆனால் இவை எல்லாமே இப்போது இங்கு உள்ளது என்று அந்த கிராமமக்கள் மகிழ்ச்சியாக கூறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X