முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெயலலிதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தான் முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, தன் பதவியைராஜினாமா செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட பெஞ்ச் இந்தத் தீர்ப்பை அளித்தது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமாசெய்யப் போவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

தொடர்ந்து, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ராஜ் பவனுக்குச் சென்ற ஜெயலலிதா, தன்னுடைய ராஜினாமா கடிதத்தைஆளுநர் டாக்டர் சி. ரங்கராஜனிடம் கொடுத்தார். ஆளுநரும் ஜெயலலிதாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.

புதிய முதலமைச்சர் இன்றே தேர்வு செய்யப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை நடைபெறவிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார்என்று தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற