தேர்தலில் குதிக்கிறது சிவாஜி மன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றம் ஆலோசனை செய்து வருவதாகஅந்த மன்றத்தின் மாநிலத் தலைவர் கே.வி.பூமிநாதன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பூமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மன்றத்தின் பல்வேறு மாவட்ட செயலாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பரிசீலிக்கவும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கவும் வருகிற 23ம் தேதிஅகில இந்திய சிவாஜி மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது.

இந்தக் கூட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது ஏதாவது ஒரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாஎன்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற