குவாலியர் கொண்டு செல்லப்பட்ட சிந்தியாவின் உடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குவாலியர்:

விமான விபத்தில் இறந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மாதவராவ் சிந்தியாவின் உடல் இன்று டெல்லியிலிருந்து,அவரது சொந்த ஊரான குவாலியருக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரபிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகே நடந்த விமான விபத்தில் காங்கிரஸ் மூத்ததலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா கொல்லப்பட்டார். பிறகு அவரது உடல்டெல்லிக்கு எடுத்துவரப்பட்டு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காகவைக்கப்பட்டிருந்தது.

இன்று அவரது உடல் விமானம் மூலம் குவாலியர் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுடன் மத்தியப் பிரதேசமுதல்வர் திக்விஜய்சிங் மற்றும மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மோஷினா கித்வாய் ஆகியோர்வந்தனர்.

மகாராஸ்பூர் விமான நிலைையத்திலிருந்து அவரது ஜெய் விலாஸ் அரண்மனைக்கு உடல் எடுத்து வரப்பட்டது.சிந்தியா மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவராவார்.

அந்த அரண்மனையில் நாளை மதியம் வரை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

சிந்தியாவின் தயார் விஜயராஜே சிந்தியாவை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் இவரது உடலும் அடக்கம்செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற