For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்தில் அச்சம் கலந்த அமைதி

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

குஜராத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பி. கே.பி.எஸ். கில் நேற்றிரவு அகமதாபாத்வந்தார். வந்தவுடன் முதல்வரைச் சந்திக்காமல் நேரடியாக குஜராத் டி.ஜி.பி. சக்தவர்த்தியைச் சந்தித்து பல மணிநேரம் பேசினார்.

உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை கூறினார்.

இந் நிலையில் கில் முதல்வரின் ஆலோசகரமாக நியமிக்கப்படவில்லை என்றும் சும்மா தான் ஆலோசனை தரவந்துள்ளார் என்றும் பா.ஜ.க. கூறியுள்ளது. இதன்மூலம் அவரது முக்கியத்துவத்தைக் குறைக்கும் முயற்சிகளைபா.ஜ.க. துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான அரசே சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைநடத்தி வருவது வெட்ட வெளிச்சமாகிவிட்டதால் உலக நாடுகளின் கண்டனத்துக்கு மத்திய அரசு ஆளாகியுள்ளது.

இதையடுத்து வேறு வழியில்லாமல் அங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு மத்திய பா.ஜ.க. அரசுநிர்பந்திக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அம் மாநிலத்தில் அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் கீழ்நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு.

இதன்மூலம் அம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும்.குஜராத் போலீஸ் உயர்அதிகாரிகளை நம்பி எதையும் செய்ய முடியாத நிலை உள்ளதால் நிலைமையைக் கட்டுப்படுத்த கே.பி.எஸ். கில்அனுப்பப்பட்டுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் அத்வானியைச் சந்தித்துவிட்டு நேற்றிரவே குஜராத் விரைந்தார்.

கில் வருவதை குஜராத் அரசு விரும்பவில்லை. ஆனால், வேறு வழியில்லாததால் அவரை ஏற்க வேண்டிய நிலையில்அம் மாநில அரசு உள்ளது. இன்று அவர் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துவிட்டு தனது வேலையைத்தொடங்குவார்.

பா.ஜ.க. குழப்பம்:

இது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் மல்ஹோத்ரா கூறுகையில்,

அவர் இன்னும் பாதுகாப்பு ஆலோசகரமாக நியமிக்கப்படவில்லை. மோடியை சந்தித்து நிலைமையை ஆராயவேஅவர் அங்கு சென்றுள்ளார் என்றார். இதன் மூலம் எதிர்க் கட்சிகளின் நெருக்குதல், உலக நாடுகளின் நிர்பந்தம்காரணமாகவே கில்லை அங்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது தெளிவாகிறது.

அவரை அனுப்பியதை பா.ஜ.க. தலைவர்கள் விரும்வில்லை.

பஞ்சாபில் 10 ஆண்டுகள் தலைவிரித்தாடிய தீவிரவாதத்தை வேறோடு பிடுங்கியவர் கில். அஸ்ஸாமில் மதக்கலவரத்தைத் தடுத்தவர். அவரை காஷ்மீருக்கும் அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் அவர் குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த விரைந்துள்ளார்.

ராஜ்யசபாவில் மாரதான் விவாதம்:

இந் நிலையில் குஜராத் அரசைக் கண்டித்து ராஜ்யசபாவில் கடந்த 2 நாட்களாக விவாதம் நடந்து வருகிறது.லோக்சபாவில் இது தொடர்பான விவாதத்தை மத்திய அரசு தோற்கடித்தது.

ஆனால், ராஜ்யசபாவில் எதிர்க் கட்சிகளுக்கு மெஜாரிட்டி அதிகம் என்பதால் இத் தீர்மானம் வெல்லும் நிலைஉள்ளது. இதனால் இதன்மீது ஓட்டெடுப்பு நடத்திவிடாமல் தவிர்க்க மத்திய அரசு முயன்று வருகிறது.

இதனால் தொடர் விவாதத்துக்கு அனுமதித்துள்ளது. இத் தீர்மானத்துக்கு திங்கள்கிழமை பிரதமர் வாஜ்பாய் பதில்சொல்வார். அதன் பின்னர் அரசின் ஆதரவுடன் இத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும் என்று தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணையா?:

இதற்கிடையே குஜராத் வன்முறையில் மாநில அரசு சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டதாகவும் அதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள பொது நல வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உடனே பதில் தருமாறு குஜராத் மாநில தலைமைச் செயலாளருக்கும் மாநில போலீஸ் டி.ஜி.பிக்கும்நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நடனக் கலைஞர் மல்லிகா சாராபாய் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிமன்றம் நரேந்திர மோடிக்குநோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் அமைதி:

இந் நிலையில் குஜராத்தில் 2 மாதங்களில் முதன்முறையாக வன்முறைச் சாவுகள் ஏதும் இல்லாமல் கடந்த 24 மணிநேரம் கழிந்திருக்கிறது.

நேற்று பகலிலும் நேற்று இரவும் எந்தவிதமான வன்முறையும் நடக்கவில்லை. இதையடுத்து பல இடங்களிலும்ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

ஆனாலும் மக்கள் யாரும் வெளியில் வரவில்லை. பய உணர்வு அவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X