For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனைக் கொல்ல வேண்டும்: கன்னடத்தில் ரஜினி ஆவேசப் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

சந்தனக் கடத்தல் வீரப்பன் ஒரு அரக்கன். அவனை சம்ஹாரம் செய்யும் நேரம் வந்து விட்டது என்று நடிகர்ரஜினிகாந்த் பெங்களூரில் படு ஆவேசத்துடன் பேசினார்.

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனீத் ராஜ்குமார் நடித்துள்ள "அப்பு" படத்தின் 100வது நாள் விழாபெங்களூரில் நடந்தது. அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியபோது,வீரப்பன் குறித்து கன்னட மொழியிலேயே படு ஆவேசமாக பேசினார். விழாவில் ரஜினி பேசியதாவது:

வீரப்பன் மனிதனே அல்ல. அவன் ஒரு அரக்கன். அந்த அரக்கனை சம்ஹாரம் செய்யும் நேரம் வந்து விட்டது.அவன் எங்கிருந்தாலும் அவனைத் தேடிப் பிடித்து அழித்துக் கொல்ல வேண்டும்.

வீரப்பனைப் போன்றவர்களை விட்டு வைப்பது நாட்டுக்கு நல்லதல்ல. எவ்வளவு சீக்கிரம் அவனைக்கொல்கிறோமோ அது நல்லது.

நடிகர் ராஜ்குமார் ஒரு மிகப் பெரிய மனிதர். அவரை காட்டுக்குள் வைத்திருந்த ஒவ்வொரு நளும் எனக்குத்தூக்கம் இல்லை. அவரது வனவாசம் முடிந்து விட்டது. இதுவரை கர்நாடக மக்களுக்கு மட்டுமே பச்சயமானராஜ்குமார் இப்போது உலகப் புகழ் பெற்று விட்டார்.

ராஜ்குமாரை மீட்பதற்கான முயற்சிகளில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் மேற்கொண்ட முயற்சிகளை நாம் நிச்சயம்பாராட்டியே ஆக வேண்டும். அவர்களுக்கு எனது ஹேட்ஸ் ஆப் என்றார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த ஆவேசப் பேச்சு அரங்கில் கூடியிருந்தவர்களுக்கு இனிய அதிர்ச்சியாக இருந்தது. இதுவரைவீரப்பன் குறித்து ரஜினி வெளிப்படையாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது தான் முதல்முறையாக, அதுவும் மிகவும் ஆவேசமாக, ராஜ்குமார் முன்னிலையில் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினி.

ரஜினியின் இந்த ஆவேசப் பேச்சை ராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டனர். ரஜினிபேசியபோதெல்லாம் கூட்டத்தில் கைத்தட்டல் பலமாக இருந்தது.

கர்நாடக தமிழர்களிடையே பீதி:

அதேசமயம், ரஜினியின் வீரப்பன் குறித்த பேச்சு கர்நாடக தமிழர்களிடையே ஒருவித பீதியையும்ஏற்படுத்தியுள்ளது. காரணம், கன்னடர்களைப் பொறுத்தவரை வீரப்பன் என்று அவர்கள் தனித்துப் பார்ப்பதில்லை,அவன் ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் அவர்கள் பார்க்கிறார்கள்.

இப்போது ரஜினியே வீரப்பனை அழிக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறி விட்டதால், அதன் மூலம், ராஜ்குமார்கடத்தலுக்குப் பிறகு தமிழர்களைக் குறிவைத்துக் காத்திருக்கும் கன்னட வெறியர்களுக்கு தீனி போட்டது போலாகிவிட்டதாக கர்நாடகத் தமிழர்கள் அஞ்சுகிறார்கள்.

ரஜினி பேச்சை வைத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக கன்னட வெறியர்கள் தாக்குதலில் ஈடுபடவும் தயங்கமாட்டார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது. வீரப்பன் குறித்து ரஜினி பேசியதில் தவறில்லை. ஆனால் கொஞ்சம்ஆவேசத்தை அடக்கிக் கொண்டு பேசியிருக்கலாம் அல்லது தமிழகத்தில் வைத்து இதைப் பேசியிருக்கலாம் என்றஎண்ணமே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதேபோல, பாபா பெரும் வெற்றி பெற்றால், சினிமாவை விட்டு விலகி விடப் போவதாக ரஜினி கூறியுள்ளதுஅவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X