For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: இந்தியாவுக்கு தைவான் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

தைப்பே:

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தர வேண்டும் என சீனாவின் முக்கிய எதிரி நாடான தைவான்கூறியுள்ளது.

தைவானை சீனா இன்னும் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அதை தன்னுடைய பகுதி என்கிறது சீனா. ஆனால், சீனாவின் ஆக்கிரமிப்பில்இருந்து தப்ப ஆயுதங்களைக் குவித்து வருகிறது தைவான்.

1971ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவை சேர்க்க இந்தியா ஆதரவு தந்தது. இதனால் தைவான் தனது இடத்தை ஐ.நாவில்இழந்தது. அந்தக் கசப்புணர்வையும் மறந்து பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற இப்போது இந்தியாவுக்கு தைவான் ஆதரவு தந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

தைவானுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லை. இதற்குக் காரணம் சீனா தான். தன்னுடன் தூதரக உறவு வைத்திருக்கும் யாரும்தைவானுடன் உறவு வைக்கக் கூடாது என சீனா கூறி வருகிறது. ஆனால், சீனாவையும் மீறி கடந்த 1995ம் ஆண்டு இந்தியா தனதுஅலுவலகத்தை தைவானில் திறந்தது. தைவானையும் ஒரு அலுவலகத்தை டெல்லியில் திறக்கச் செய்தது.

பாதுகாப்புக் கவுன்சிலில் இப்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. இதில் அமெரிக்கா, ரஷ்யாஆகியவை எந்தத் தீர்மானத்தையும் தோற்கடிக்கும் வீடோ அதிகாரம் கொண்டவை. இவை 10 நாடுகள் இந்தக் கவுன்சிலில் சுழற்சிமுறையில் தாற்காலிகமாக இடம் பிடித்து வருகின்றன. ஆனால், இந்தப் பதவி உப்புக்குச் சப்பாணி போன்றது.

நிரந்தர இடம் கொண்ட 5 நாடுகள் தான் ஐ.நாவின் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கின்றன. 100 கோடி மக்கள் தொகை கொண்ட,தெற்காசியாவின் மிக முக்கிய நாடான இந்தியா தனக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதற்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதில் அமெரிக்கா டபுள் கேம் ஆடி வருகிறது.

இந் நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக தைவான் குரல் கொடுத்துள்ளது. அந் நாட்டு வெளியுறவுத்து அமைச்சர் யூஜீன் சியென்கூறுகையில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற இந்தியாவுக்கு அனைத்துத் தகுதிகளும் உள்ளன. தெற்காசியா மட்டுமின்றி உலகஅளவில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவின் பங்கு அவசியம்.

அணிசேரா நாடு என்ற பெயரில் இந்தியா ஒதுங்கி இருந்தது மிகப் பெரிய தவறு. இதனால் அதன் முக்கியத்துவம் குறைந்தது. ஆனால்இன்றும் மூன்றாம் உலக நாடுகளுக்கு தலைவனாக இருந்து வழி நடத்தும் அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உண்டு.

பாதுகாப்பு கவுன்சிலில் மூன்றாம் உலக நாடுகளுக்கு பிரதிநிதித்துவம் தரும் வகையில் இந்தியாவை அதில் சேர்க்க வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் மேலும் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களும் அடிக்கடி சந்தித்துப் பேசவேண்டும் என்றார் யூஜீன்.

சின்னஞ்சிறிய நாடான தைவான் மிகப் பெரிய பொருளாதார வல்லமை படைத்தது. உலகில் அதிக அளவில் ஆயுதங்கள் இறக்குமதிசெய்யும் நாடுகள் பட்டியலில் தைவான் முதலிடத்தில் உள்ளது.

ஆயுதங்களுக்கு இந்த நாடு ஒதுக்கும் நிதி பல நாடுகளின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட அதிகம். அமெரிக்கா உள்பட பல வளர்ந்தநாடுகளில் முதலீடு செய்யும் அளவுக்கு தைவானின் பொருளாதார பலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X