சேலம் அரசு டாக்டர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
சென்னை:
சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 2 டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவைதமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.
சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சமீபத்தில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களும்,சிறுமியும் இறந்தனர்.
டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களின் அலட்சியம் காரணமாகவே இந்த சாவுகள் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகவும்புகார் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து இரண்டு டாக்டர்கள் உள்பட 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மருத்துவமனையின் டீன்டாக்டர் கணபதி இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இதை மருத்துவர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. இந்த மருத்துவமனையின் 90 பயிற்சி டாக்டர்களும் இன்றுபணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் சேலம்விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அறிக்கை அரசிடம் இன்று தமிழக அரசிடம் தாக்கல்செய்யப்பட்டது.
இதையடுத்து 13 பேர் மீதான சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து செய்யப்பட்டதாக நலத் துறை அமைச்சர் செம்மலைஇன்று நிருபர்களிடம் கூறினார்.
மேலும் இந்த மருத்துவமனையில் தொடர் சாவுகள் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
-->


