பெங்களூரில் கன்னட அமைப்பினர் மீண்டும் வெறி
பெங்களூர்:
பெங்களூரில் தமிழ்ப் படம் திரையிடப்பட்டிருந்த 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன. அங்கிருந்த படச்சுருள்களும் பிடுங்கப்பட்டு ரோட்டில் எறியப்பட்டு தீ வைக்கப்பட்டன.
தமிழர்கள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்த கன்னட ரெளடிகள் இந்த காட்டுச் செயலில் ஈடுபட்டனர்.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப் படுவதை எதிர்த்து கர்நாடகத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ்ப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் டி.வி. சேனல்களும் இருட்டடிப்புசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அல்சூர் உள்ளிட்ட சில பகுதியில் கடந்த சில நாட்களாகதமிழ் டி.வி. சேனல்கள் மீண்டும் ஒளிபரப்பட்டு வருகின்றன.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள லாவண்யா தியேட்டரில் பார்த்திபன் நடித்த "இவன்" படம் திரையிடப்பட்டது.அதன் அருகே உள்ள லட்சுமி தியேட்டரில் "சுந்தரா டிராவல்ஸ்" படம் திரையிடப்பட்டது.
இதை அறிந்த கன்னட வெறியர்கள் பல ஆட்டோக்களில் இரு தியேட்டர்களுக்கும் வந்து கடும் ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர். தமிழ் திரைப்படங்களை உடனடியாக நிறுத்துமாறு கோஷம் போட்டனர்.
பின்னர் அவர்கள் இந்த இரு தியேட்டர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து அப்பகுதியில் பெரும்பதற்றம் ஏற்பட்டது.
இக் கும்பல் பின்னர் லாவண்யா தியேட்டரின் ஆபரேட்டர் அறைக்குச் சென்று படச் சுருள்களை உருவியது. லட்சுமிதியேட்டரிலும் இதே போலவே படச்சுருளை கன்னட வெறியர்கள் பிடுங்கி ரோட்டில் போட்டு எரித்தனர்.
இதனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிக் கொண்டு வெளியே ஓடினர். அவர்களையும் இக் கும்பல்தாக்கியது.
தியேட்டர்களில் ஒட்டப்பட்டிருந்த தமிழ்ப் படங்களின் போஸ்டர்களும் கிழித்து எறியப்பட்டன.
இதற்கிடையே பாரதி நகர் போலீஸ் நிலையம் முன்பாகக் கூடிய சில கன்னட வெறி அமைப்பினர், அல்சூர் பகுதியில்தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோஷங்களுடன் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பப்படுவது மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டது.
கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலியில் தமிழ் நடிகர்களை அழைத்துக் கொண்டுபோராட்டம் நடத்திய பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதுவரை தமிழ் சேனல் ஒளிபரப்போ,தமிழ் திரைப்படங்கள் திரையிடப்படுவதோ தொடர்ந்து நிறுத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜின் கன்னட வெறிஅமைப்பான ரக்ஷன வேதிகே அமைப்பு தெரிவித்துள்ளது.
தியேட்டர்கள் மீதான இந்தத் தாக்குதல்களை போலீஸ் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் சேனல்களை காட்டாவிட்டால் கேபிள் டிவிக்கு பணம் தர மாட்டோம் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெரிவித்துவருகின்றனர். இதனால் அவ்வப்போது தமிழ் சேனல்களை கேபிள் டிவிக்காரர்கள் காட்டி வருகின்றனர். பெங்களூரில் வசிக்கும்தமிழர்கள் மட்டுமின்றி கன்னட, தெலுங்கு, மலையாள மக்களாலும் தமிழ் சேனல்கள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இதனால் பிசினஸ் இழந்து வரும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ் சேனல்களைக் காட்ட முயல்கின்றனர். அதைகன்னட வெறியர்கள் தடுக்கின்றனர்.
கன்னட வெறியர்களை அடக்க முடியாத கர்நாடக அரசும் போலீசும் அதை நினைத்து வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும்.
-->


