பெண் புலிகள் விவகாரம்: சந்திரிகா கொடும்பாவி எரிப்பு
கொழும்பு:
பெண் புலிகள் பெல்ட் அணியக் கூடாது என்று கூறி அதை அவிழ்த்த ராணுவத்தினரையும் அவர்களைத் தூண்டிவிட்ட அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவையும் எதிர்த்து இலங்கையின வட-கிழக்குப் பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
ஆயிரணக்கான பெண்களும், ஆண்களும் இன்று சந்திரிகாவின் கொடும்பாவியை எரித்து ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர்.
போர் நிறுத்த உடன்படிக்கையின்படி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் விடுதலைப் புலிகள் நுழையும்போது சாதாரண உடைஅணிந்து தான் வர வேண்டும், புலிகளுக்கான சீருடையில், ஆயுதங்கள் வரக் கூடாது என்று தடை உள்ளது.
அதை புலிகள் மதித்து வருகின்றனர். இந் நிலையில் சாதாரண உடையில் (பேண்ட், சர்ட்டில்) ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யாழ்பாணத்தின்மணிப்பே என்ற பகுதியில் நுழைந்த பெண் புலிகளை ராணுவத்தினர் தடுத்தனர். ஏன் பெல்ட் கட்டியிருக்கிறீர்கள் என்று கேட்டனர். அதைஅவிழ்க்கவும் முயன்றனர்.
அப்போது பெண் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் மூண்டது. புலிகளின் கோபத்தை உணர்ந்த ராணுவத்தினர் அந்தபெண் புலிகளை தொடர்ந்து பெல்ட் அணிந்து செல்ல அனமதித்தனர்.
ராணுவத்தினரின் இந்த அடாவடி செயலுக்கு புலிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். நார்வே அமைதிக் கண்காணிப்புக் குழுவினரும்இலங்கை ராணுவத்தினரின் இச் செயலை கண்டித்துள்ளனர். சாதாரண பேண்ட் மீது பெல்ட் கட்டுவதில் எந்தத் தவறும் இல்லை, அவர்கள்போர் உடையில் வரவில்லை என்று நார்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந் நிலையில் ராணுவத்தினருக்கும் சந்திரிகாவுக்கும் எதிராக இன்று யாழ்பாணத்தில் பெரும் போராட்டம் நடந்தது. சுமார் 8,000 பேர்இன்று யாழ்பாணத்தில் கூடி சந்திரிகாவின் கொடும்பாவியை எரித்தனர்.
இந்தப் பகுதியின் ராணுவ கமாண்டர் சரத் பொன்சேகாவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என விசுதலைப் புலிகள் இயக்கம் எச்சரித்துள்ளது.


