For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரி ரத்து- பெரியார் படத்துக்கு ரூ 95 லட்சம் உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதுப் படங்களுக்கு கேளிக்கை வரி முழுமையாகரத்து செய்யப்படும் என நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பட்ஜெட்டில்அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விவரம்:

தரமணி திரைப்பட பயிற்சிக் கல்லூரியின் பெயர் எம்.ஜி.ஆர்.

தொலைக்காட்சி, திரைப்பட பயிற்சிக் கல்லூரி என பெயர் மாற்றப்படும்.

சத்யராஜ் நடிக்கும் பெரியார் திரைப்படத்திற்கு ரூ. 95 லட்சம் நிதியுதவிஅளிக்கப்படும்.

தமிழிலேயே பெயர் சூட்டப்படும் புதுப் படங்களுக்கு கேளிக்கை வரி முழுமையாகரத்து செய்யப்படும்.

25,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும்.

கடும் ஊனமுற்றோருக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ. 200லிருந்து 500 ஆக உயர்த்தப்படுகிறது.

மகளிர் சுய உதவிக் குழுவினரின் பயிற்சிக்கான உதவித் தொகை ரூ. 7.50லிருந்து ரூ. 48 ஆக உயர்த்தப்படும்.

அரவாணிகள் சுய உதவிக் குழுக்கள், குடும்ப அட்டைகள் வழங்க திட்டம்.

கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ. 1,435 கோடி ஒதுக்கீடு

விவசாயக் கடன் வட்டி 7 சதவீதமாகக் குறைப்பு

சென்னை, மதுரை, கோவையில் விவசாய ஏற்றுமதி டெர்மினல்கள் உருவாக்கப்படும்

இந்த ஆண்டில் தமிழக உணவு உற்பத்தி 95 லட்சம் டன் ஆக உயரும்

உழவர் சந்தைகள் அனைத்தும் மீண்டும் இயங்கச் செய்யப்படும்

தரிசு நிலங்களை ஏழைகளுக்கு பிரித்துத் தர அந்த நிலங்கள் குறித்த விவரங்கள்

சேமிக்கப்பட்டு வருகின்றன. தரிசி நிலங்களில் ஜெட்ரோபா (காட்டாமணக்கு) பயிர் செய்ய விவசாயிகளுக்குஉதவி செய்யப்படும். ஜெட்ரோபாவில் இருந்து கிடைக்கும் பயோ-டீசல், டீசலுக்கு மாற்றாக அமையும்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக கேரள அரசு சட்டசபையில்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது தமிழகத்தின் தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு மாறானது. இந்தவிஷயத்தில் கேரள அரசுக்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டமாகமாற்றி அமல்படுத்தப்படும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணியாட்களுக்கு ஒரு நாள்ஊதியம் ரூ. 80 கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X