மதுரை இடைத் தேர்தலில் திமுக அமோக வெற்றிதிமுக-50994: அதிமுக-19909: தேமுதிக-17394

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Goush Batcha - DMKமதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் 31,085 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் கெளஸ் பாட்சா முன்னிலையில் இருந்து வந்தார்.

பல சுற்றுக்கள் நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கெளஸ் பாட்சா 50994 வாக்குகளைப் பெற்றார்.

Rajin Challappa - ADMKஅதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா 19909 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக வேட்பாளர் பன்னீர்செல்வம் 17394 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப்பிடித்தார். போட்டியிட்ட 13 சுயேச்சைகள் டெபாசிட் இழந்தனர்.

திமுகவைச் சேர்ந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மறைவைத் தொடர்ந்து கடந்த 11ம் தேதி இங்கு இடைத்தேர்தல் நடந்தது.

Pannerselvam - DMDkமொத்த வாக்காளர்களான 1.32 பேரில் 90,887 பேர் வாக்களித்தனர். இது 68.72 சதவீத வாக்குப் பதிவாகும். இந்தத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. மருத்துவக்கல்லூரியின் பயோ கெமிஸ்ட்ரி துறை அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்குஎண்ணிக்கையையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மொத்தம் 14 மேசைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு மேசையிலும் ஒருமேற்பார்வையாளர், 3 ஊழியர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 10.30 மணிக்கு முடிந்துவிட்டது.

வாக்கு எண்ணிக்கையையொட்டி மருத்துவக் கல்லூரி வளாகத்தைச் சுற்றி ஆயுதம் தாங்கிய போலீசார் ஏராளமான அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பெரும்பரபரப்பு நிலவியது.

தேர்தல் பார்வையாளர்கள் மாற்றம்:

இதற்கிடையே மதுரையில் திமுக, அதிமுகவினர் இடையே பெரும் மோதல் நடந்த போது சுற்றுலா சென்று விட்டதாக சர்ச்சையில் சிக்கிய இரு தேர்தல்பார்வையாளர்களும் திரும்ப அழைக்கப்பட்டு விட்டனர்.

இருவரில் ஒருவரான மீனா, ராமேஸ்வரத்திற்கும், இன்னொருவரான சஞ்சீவ் குமார் தேக்கடிக்கும் சுற்றுலா போயிருந்தனர். இது பெரும் சர்ச்சையைஎழுப்பியது. இதைத் தொடர்ந்து இருவரையும் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் இருவரும் திரும்பப் பெறப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல்ஆணையத்தின் சிறப்பு கூடுதல் பார்வையாளராக கேரளாவைச் சேர்ந்த மாஹி என்பவர் செயல்படுவார் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாதெரிவித்துள்ளார்.

இறுதி வாக்கு விவரம்:மொத்த வாக்குகள்: 1,32,251
பதிவானவை: 90,887
கெளஸ் பாட்ஷா (திமுக) - 50,994.
ராஜன் செல்லப்பா (அதிமுக) - 19,909.
பன்னீர் செல்வம் (தேமுதிக) - 17,934.
வாக்கு வித்தியாசம்: 31,085.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...