For Daily Alerts
Just In
துபாயில் சுவர் இடிந்து இந்திய தொழிலாளி பலி
துபாய்: துபாயின் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் அருகே கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளி மீது காண்க்ரீட் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
அந்த சுவரின் அருகே 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்தது. இதில் 9 பேர் காயங்களுடன் தப்பிவிட்டனர்.
ஆனால், 24 வயதான தொழிலாளி இடிபாடுகளில் சிக்கி பலியானார்.
கோழிக்கோடு அல்-அரேபியா விமான சேவை:
கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு குறைந்த கட்டண விமான நிறுவனமான அல் அரேபியா தனது சேவையை தொடங்கவுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த விமான தேவை தொடங்கும். ஏற்கனவே திருவனந்தபுரம், கொச்சிக்கு இந்த நிறுவனம் விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடதக்கது.
இப்போது ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டு வாரத்துக்கு 3 முறை விமானங்களை இயக்கவுள்ளது.