For Daily Alerts
Just In
இந்தியா-இஸ்ரேல் கூட்டணியில் 'ஆளி்ல்லா ஹெலிகாப்டர்'
ஜெருசலம்: இந்திய-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் அதி நவீன ஆளில்லா தானியங்கி உளவு ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் மற்றும் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் இணைந்து இதை தயாரித்துள்ளன. தானாக புறப்படவும், தரையிறங்கும் வகையில் இந்த ஹெலிகாப்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையிலும் இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் சூப்பராக இயங்கும் வகையில் உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானம் தாங்கி கப்பல் மற்றும் எல்லாவகை நிலப்பரப்பிலும் சர்வ சாதாரணமாக இதை தரையிறக்க முடியும்.
கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா ஹெலிகாப்டரில் இரவிலும் துள்ளியமாக படம் பிடித்துக் காட்டும் கேமராக்களும், ரேடார் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.