For Daily Alerts
Just In
ஜூன் 2ல் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு
சென்னை: திமுக பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 2ம் தேதி நடைபெறுகிறது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 2ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
பொதுக்குழுக் கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழா, கழக அமைப்புத் தேர்தல்கள் குறித்தும், கட்சியின் வரவு-செலவுக் கணக்கு குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் கருணாநிதி மீண்டும் தேர்வு செய்யப்படக் கூடும் என்று கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.