For Daily Alerts
Just In
'குடி': இளம் விதவைகள் பேரணி-ராமதாஸ் பங்கேற்பு
சென்னை: மது ஒழிப்பை வலியுறுத்தி வலியுறுத்தி விதவைப் பெண்கள் வெள்ளை புடவை அணிந்து சென்னை கோட்டை நோக்கி நாளை பேரணி நடத்த உள்ளனர்.
இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் குடியினால் நோய்வாய்பட்டு இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே மது ஒழிப்பை வலியுறுத்தி குடியினால் நோய்வாய்பட்டு இறந்தவர்களின் மனைவிகள் (இளம் விதவைகள்) வெள்ளைப் புடவை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்துகின்றனர்.
நாளை மாலை 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து பேரணி புறப்படுகிறது. இந்த பேரணியில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.