For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களவை தொகுதி அறிமுகம்-30: தஞ்சாவூர்

By Sridhar L
Google Oneindia Tamil News

Tanjavur
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் முக்கியமானது தஞ்சாவூர்.

ஆர்.வெங்கட்ராமன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட பெருமை உடைத்தது தஞ்சாவூர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதி இது. பாரம்பரியம் மிக்க தஞ்சைத் தரணியின் பெயரில் அமைந்த இந்தத் தொகுதியில், 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சை தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.

அதே போன்று நாகை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.

திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளே.

தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், திமுக 6 முறையும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு முறை வெற்றி கிட்டியுள்ளது.

சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்தியலிங்கமும், தஞ்சாவூரில் திமுகவின் உபையதுல்லாவும், திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரனும், பட்டுக்கோட்டையில் காங்கிரஸின் ரங்கராஜனும், பேராவூரணியில் அதிமுகவின் வீரகபிலனும், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியமும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) - 4,00,986.
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838.
வெற்றி வித்தியாசம் - 1,19,148 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1957 - ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1962 - வைரவத்தேவர் -காங்.
1967 - கோபாலர் - திமுக
1971 - எஸ்.டி. சோமசுந்தரம் - திமுக
1977 - எஸ்.டி. சோமசுந்தரம் - அதிமுக
1980 - சிங்காரவடிவேல் - காங்.
1984 - சிங்காரவடிவேல் - காங்.
1989 - சிங்காரவடிவேல் - காங்.
1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்.
1996 - பழனிமாணிக்கம் - திமுக
1998 - பழனிமாணிக்கம் - திமுக
1999 - பழனிமாணிக்கம் - திமுக
2004 - பழனிமாணிக்கம் - திமுக

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஆர்.வெங்கட்ராமன் (காங்.)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X