கம்பம் சிபிஎம் வேட்பாளரின் சொத்து ரூ.1,090

Subscribe to Oneindia Tamil

கம்பம்: கம்பம் சட்டசபை இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜப்பனிடம் வெறும் ரூ. 1090 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் கையில் ரூ. 1000 மட்டும் உள்ளது. அஞ்சலக சேமிப்பில் ரூ. 90 வைத்துள்ளார்.

கோடீஸ்வர வேட்பாளர்கள் கொடி கட்டிப் பறக்கும் இந்தக் காலத்தில் சிபிஎம் வேட்பாளர் ராஜப்பனின் மொத்த சொத்து மதிப்பு சில ஆயிரங்களுக்குள்தான் உள்ளது.

வேட்பு மனுவுடன் ராஜப்பன் தாக்கல் செய்துள்ள சொத்து மதிப்பு விவரம். ரொக்கக் கையிருப்பு ரூ. 1000, அஞ்சலக சேமிப்பு ரூ. 90.

மனைவியிடம் ரொக்கக் கையிருப்பு ரூ. 1100. 2 மகன்களிடம் ரொக்கக் கையிருப்பு ரூ. 800.

மகன்கள் பெயரில் வங்கி முதலீடு 4053 ரூபாய் 25 பைசா.

ராஜப்பன் குடும்பத்தினரின் மிகப் பெரிய சொத்து எது என்றால் மூன்றரை பவுன் தங்க நகை மட்டும்தான்.

கம்பம் தொகுதியின் மற்ற வேட்பாளர்களின் நிலவரத்தைப் பார்ப்போம்...

ராமகிருஷ்ணன்(தி.மு.க.)

பிரிவினை இல்லாத குடும்ப சொத்து மதிப்பு 4 கோடியே 60 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய். விவசாய நிலம், வீடு ஆகியவை அடங்கும்.

இதில் 3-ல் ஒரு பங்கு குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அசையா சொத்து மதிப்பு ரூ 12 லட்சத்து 31 ஆயிரத்து 842, கையிருப்பு ரூ 1 லட்சத்து 30 ஆயிரம்,மனைவியிடம் ரூ 10 ஆயிரம், குடும்ப உறுப்பினர்களிடம் ரூ20 ஆயிரம், வங்கி இருப்பு ரூ 21 லட்சத்து 94 ஆயிரத்து 849 மனைவி பெயரில் வங்கி இருப்பில் 80 பவுன் தங்க நகை, டொயோட்டா கார். ஸ்கார்பியோ கார், போர்டு கார், டிராக்டர் ஆகிய வாகனங்கள் உள்ளன.

அருண்குமார் (தேமுதிக)

குடும்ப சொத்து ரூ.1 கோடியே 71 லட்சத்து 2 ஆயிரத்து 955. இதில் மூன்றில் ஒரு பங்கு மட்டும். இதில் ஏலத் தோட்டம், வீடு, மாட்டுக் கொட்டகை அடங்கும்.

ரொக்க கையிருப்பு ரூ.2 லட்சம், வங்கி இருப்பு ரூ.2 ஆயிரம்.

சசிக்குமார் (பா.ஜ.க)

ரொக்கக் கையிருப்பு ரூ 50 ஆயிரம். மனைவியிடம் 10 பவுன் தங்க நகை உள்ளது.

தேமுதிகவின் பெரும் பணக்கார வேட்பாளர்

ஸ்ரீ வைகுண்டம் தொகுதி..

சவுந்தரபாண்டியன் (தேதிமுக)


ரொக்கம் ரூ.15 லட்சம், வங்கி இருப்பு ரூ.10 ஆயிரம், மெர்க்கண்டைல் வங்கி பங்கு பத்திரங்கள் ரூ.1.30 லட்சம், எல்.ஐ.சி. சேமிப்பு பத்திரம் ரூ.5 லட்சம், 160 கிராம் தங்க நகை ரூ.2 லட்சம், பொன்னேரியில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் உழவூரில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள நிலம், ஏலத்தில் விடப்படும் நிலத்தை வாங்க மும்பை உயர்நீதிமன்றத்தில் செலுத்திய முன்பணம் ரூ.81.25 லட்சம், சைதாப்பேட்டையில் ரூ.31 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனை, சென்னை வடகரையில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு, ஊட்டியில் ரூ.5 கோடி மதிப்புள்ள ஓட்டல், சென்னை பம்மலில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு, எழும்பூரில் ரூ.32.76 லட்சம் மதிப்புள்ள வீடு, வில்லிவாக்கத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் ஒரு கார், மனைவி அமுதா பெயரில் ரொக்கம் ரூ.2 லட்சம், வங்கியிருப்பு ரூ. 5 ஆயிரம், சேமிப்பு பத்திரம் ரூ.10 லட்சம், நகை 200 கிராம் ரூ.2.60 லட்சம், மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.25 லட்சம், கொடைக்கானலில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள குடியிருப்பு, ஒரு காரும் உள்ளன.

சந்தனகுமார்( பா.ஜ.க)

ரொக்கம் ரூ.5 ஆயிரம், வங்கி இருப்பு ரூ.4,816, சேமிப்பு பத்திரம் ரூ. 1 லட்சம், நகை 8 கிராம் ரூ.7 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 816 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

மனைவி சொர்ண சுகந்தி பெயரில் வங்கி இருப்பு ரூ.70,800, பத்திரங்கள் ரூ.67 ஆயிரம், சேமிப்பு பத்திரம் ரூ.1.50 லட்சம், நகை 60 கிராம் ரூ.1.40 லட்சம், தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானில் 3.16 சென்ட் நிலம் ரூ.1.79 லட்சம் என ரூ.6 லட்சத்து 6,800 மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

இருவரது பெயரிலும் ஆளுக்கு ஒரு டூவிலர் உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...