For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு சென்னை?

By Staff
Google Oneindia Tamil News

IT Firm
சென்னை: இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என வர்ணிக்கப்படும் பெங்களூர் கிட்டத்தட்ட ஒரு 'சாச்சுரேஷன்' நிலைக்குப் போய் விட்டது. இனிமேலும் அது வளரும் என்ற நிலை இல்லை. அதேசமயம், அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு எது என்ற சிந்தனைக்கு நாம் போக வேண்டிய நேரம் வந்து விட்டது என்கிறார் அருண் பிரபுதேசாய்.

ஒரு இணையத் தளத்தி்ல் இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், இந்தியாவின் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்காக உருவெடுக்கும் வாய்ப்பு புனே அல்லது சென்னைக்கு இருப்பதாக கூறியுள்ளார்.

அவரது கட்டுரை...

பெங்களூர் இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு அல்ல என்ற கருத்துடைய கூட்டத்தில் நானும் ஒருவன். பெங்களூரில் ஏகப்பட்ட ஐடி சர்வீஸ் நிறுவனங்கள் உள்ளன. அதேசமயம், அது ஒரு 'சாச்சுரேஷன்' அளவை எட்டி விட்டது. இதற்கு மேலும் அது சிலிக்கான் பள்ளத்தாக்காக நீடிக்க முடியாத நிலை வந்து விட்டது.

பெங்களூர் சிலிக்கான் பள்ளத்தாக்கு இல்லையென்றால் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு எது என்ற கேள்வி எழுவது இயல்பு.

இதுகுறித்து இங்கு விவாதிக்கலாம். இது ஒரு ஆரோக்கியமான விவாதமே தவிர பெங்களூருக்குப் போட்டியான கட்டுரை அல்ல.

ஒரு சிலிக்கான் பள்ளத்தாக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பால் கிரகாம் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஆனால் அவர் கூறியுள்ள எதுவுமே இந்திய நகரங்களுக்கும் சரி, கலாச்சாரத்திற்கும் சரி பொருத்தமாகவே இருக்காது.

நமக்கு அது இப்போது தேவையில்லை. இந்தியாவின் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்கு எது என்ற கேள்விக்குப் போவோம்.

அப்படி யோசிக்கையில் எனது நினைவில் வருவது இரண்டு நகரங்கள்தான். ஒன்று புனே, இன்னொன்று சென்னை.

புனே...

புனே ஒரு வளர்ந்து வரும் நகரம். ஏராளமான தொழிலதிபர்கள், சிறு முதலீட்டாளர்கள் குவிந்து கிடக்கும் நகரம். என்ஆர்ஐகளின் வருகை இங்கு அதிகம். ஏராளமான ஐடி பூங்காக்களும் இப்போது பெருகி விட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது புனே அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்காக மாறும் வாய்ப்புகள் பிரகாசமாகவே தெரிகின்றன.

புனே நகரின் சாதக அம்சங்கள்..

- கலிபோர்னியாவைப் போலவே இங்கும் அருமையான தட்பவெப்பம் நிலவுகிறது.

- இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பை வெகு அருகில் உள்ளது.

- சிறிய அழகிய நகராக திகழ்கிறது புனே.

- மாபெரும் தொழில்நுட்ப சமுதாயம் இங்கு உள்ளது.

புனே நகரின் பாதகங்கள்..

- ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இருந்தபோதிலும் ஐஐசி, என்ஐடி போன்றவை இல்லை.

- வெற்றிக் கதைகள் இங்கு குறைவு - ஒருவேளை இனிமேல் வரலாம்.

- மோசமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் - சாலைகள், மின்சாரம், இன்டர்நெட் இணைப்புகள் மோசம்.

சென்னை ...

சென்னையைப் பொறுத்தவரை அருமையான மாணவர் கூட்டம் இங்கு பெரிய அளவில் உள்ளது. கிண்டி பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, சென்னை கணிதக் கழகம் உள்ளிட்டவை ஐடி ஹைவேயிலிருந்து 1 முதல் 2 கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ளன.

சென்னை நகரின் சாதக அம்சங்கள்..

- அருமையான மாணவர்கள், திறமையான மாணவர்கள், பிரபலமான பல்ககலைக்கழகங்கள் சென்னையின் மிகப் பெரிய பலம்.

- மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு தலைவலிகள் குறைவு.

- பிற பெருநகரங்களை ஒப்பிடுகையில், இங்கு வாடகை குறைவு. தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறையப் பேர் கிடைப்பார்கள்.

- ZOHO போன்ற வெற்றிக் கதைகள் இங்கு நிறைய உண்டு.

சென்னையின் பாதகங்கள்...

- மிகப் பெரிய மைனஸ் பாயின்ட் - கடும் வெயில்தான்.

- மொழிப் பிரச்சனை கொஞ்சம் உண்டு.

சென்னைக்கு அருகில் புதுச்சேரி உள்ளது. ஒன்றரை மணி நேரம் டிரைவ் செய்தால் புதுச்சேரிக்கு சென்று விடலாம். ரிலாக்ஸ் செய்து கொள்ள அருமையான இடம் (எப்படி என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா..)

இடம் எதுவாக இருந்தால் என்ன, தொழில்நுட்ப வல்லுநர் கூட்டம் அதிகம் இருக்க வேண்டியது முதல் முக்கியம். மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும்.

எனது மனதில் வேறு சில நகரங்களும் கூட வந்து போகின்றன

கோவை - ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இப்பிராந்தியத்தில் நிறைந்துள்ளன. ஊட்டி 2 மணி நேர தொலைவில் உள்ளது.

அகமதாபாத் - சக்தி வாய்ந்த தொழில்நுட்ப சமுதாயத்தை உருவாக்க குஜராத் அரசு ஏராளமான நடவடிக்கைகளை இந்த ஊரில் எடுத்து வருகிறது. தொழில் செய்ய அருமையான இடம் இது. எனவே இந்த நகர் குறித்தும் எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.

இவையெல்லாம் எனது கணிப்புகள்தான். இது முழுமையானதாக இல்லாமலும் இருக்கலாம். இருப்பினும் அடுத்த சிலிக்கான் பள்ளத்தாக்காக மாறக் கூடிய வாய்ப்புகள் இந்த நகரங்களுக்கு அதிகம் உள்ளன என்பது எனது கருத்து.

உங்க கருத்து என்னவோ..?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X