For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி மாநாடு-ஒரு பார்வை

Google Oneindia Tamil News

இன்று தொடங்கிய உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, இந்த வரிசையில் முதல் மாநாடாகும். இது 5 நாட்கள் நடைபெறுகிறது.

மாநாட்டைக் காண 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

49 நாடுகளிலிருந்து 1200 தமிழறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

5 நாள் மாநாட்டில் 1364 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பல்வேறு தமிழறிஞர்கள், தமிழ்ப் புலவர்கள் பெயரில் 28 ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

11,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டையொட்டி தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 3 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் யார், யார்?

தொடக்க விழாவைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு விட்டனர். முதல்வர் கருணாநிதி குடும்பத்திலிருந்து மனைவி தயாளு அம்மாள், துணைதவியார் ராஜாத்தி அம்மாள், மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, ஸ்டாலின், அழகிரி குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திரையுலகைச் சேர்ந்த பாக்யராஜ், பூர்ணிமா ஆகியோரும் வந்திருந்தனர்.

இலங்கையிலிருந்து வந்தவர்கள்...

ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோல, யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து, பேராசிரியர்களான அ.சண்முகதாஸ், சி.சிவலிங்கராஜா, ப.புஸ்பரத்தினம், டாக்டர் மனோன்மணி சண்முகதாஸ், டாக்டர் விசாகரூபன், டாக்டர் செல்வரஞ்சிதம், ஈ.குமரன், பேராயர் டாக்டர் எஸ்.ஜெபநேசன், விரிவுரையாளர் டாக்டர் ச.லலீசன், செல்வி.செல்வாம்பிகை நடராஜா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர் செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ.பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X