For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மாகாண 'முதலமைச்சர்': சல்யூட் மரியாதையுடன் கேபியை வரவேற்ற ராணுவம்!

By Chakra
Google Oneindia Tamil News

KP
கொழும்பு: குமரன் பத்மநாதன் எனும் கேபியை 'வடக்கிற்கான முதலமைச்சர்', என்று இலங்கை அரசு அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சமீபத்தில் முல்லைத்தீவு சென்ற கேபி, முதல்வருக்குரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டதாகவும், அவருக்கு ராணுவத்தினர் அவருக்கு சல்யூட் அடித்து வரவேற்பளித்ததாகவும் இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுலகத் தொடர்பாளர் கேபி, மலேசியாவில் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை ராணுவ முகாமில் 'சிறை' வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் கேபி கைது செய்யப்படவில்லை என்றும், புலிகளின் ரகசியங்கள் அனைத்தையும் அவர் ராணுவத்துக்கு சொல்லிவிட்டதால், அரசு விருந்தினராக, சுதந்திர வாழ்க்கைய அனுபவித்து வருவதாகவும் ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.

பின்னர் அவற்றை உறுதிப்படும் வகையில் நிகழ்ச்சிகள் படிப்படியாக அரங்கேறின. இப்போது வட மாகாண முதல்வர் பதவியில் கேபி அமர்த்தப்படக் கூடும் என்று தெரிகிறது.

சமீபத்தில் முல்லைத்தீவில் உள்ள முத்தையன் கட்டுப் பகுதிக்கு ஒரு குழுவுக்கு தலைமை வகித்து பயணம் மேற்கொண்டார் கேபி. அவரை அழைத்துச் சென்ற ராணுவ அதிகாரிகள், முல்லைத் தீவிலிருந்து பிற அதிகாரிகளுக்கு, "வட மாகாணத்துக்காகன நமது முதலமைச்சர் இவர்" என்று அறிமுகம் செய்து வைத்தனர்.

கேபியின் வருகை பற்றிய தகவல் முற்கூட்டியே அப்பகுதி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அவரையும் உடன் வருபவர்களையும் உயர் மரியாதையுடன் நடத்தும்படி கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி, விசேஷ ஹெலிகாப்டரில் முத்தையன் கட்டுப் பகுதிக்கு வந்த கேபிக்கு, முல்லைத் தீவுக்கான இராணுவ முக்கிய அதிகாரி 'சல்யூட்' மரியாதை அளித்து வரவேற்றுள்ளார்.

அங்கிருந்த அனைவரிடமும், "இவர்தான் வட மாகாணத்தின் முதல்வராக பதவியேற்கப் போகிறவர்", என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X