For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ. 8 கோடி சீன செல்போன்கள், அழகு சாதன பொருட்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: சீனாவில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட ரூ. 8 கோடி செல்போன்கள், அழகுசாதன பொருட்களை தூத்துக்குடியில் அதிகாரிகள் பறி்முதல் செய்தனர்.

சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக டெல்லியை சேர்ந்த சன் இன்டர்நேசனல் என்ற நிறுவனத்துக்கு 4 கன்டெய்னர்கள் வந்துள்ளன. ஒரு மாத காலமாகியும் அதற்கு உரிமை கோர யாரும் வரவில்லை.

இதனால் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இயக்குனர் ராஜா தலைமையில் அதற்குரிய ஆவணங்களை சோதித்தனர். அவற்றில் ஒரு கன்டெய்னரில் ஷீவும், மீதமுள்ள 3 கன்டெய்னரில் செல்போன் உதிரி பாகங்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருநதது. அந்த ஆவணங்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கன்டெய்னர்களை திறந்து சோதனை நடத்தினர். அவற்றில் மு்ன் வரிசையில் ஷூ மற்றும் செல்போன் உதிரி பாகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பின்னால் அழகுசாதன பொருட்கள் மறைந்து வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த செல்போன் உதிரி பாகங்கள், அழகு சாதன பொருட்கள் போலி என தெரிய வந்தது. மேலும் பிரபல நிறுவனங்கள் பெயரில் அவை போலியாக தயாரிக்கப்பட்டுளளதும் தெரிய வந்தது.

இவை சுறறுபுறத்தை மாசுபடுத்துவதாகவும், உடல்நலத்தை பாதிக்க கூடியதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்ப்ட்டு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

English summary
Customs sleuths have seized Rs. 8 cr worth cell phones and makeup kits in Tuticorin port. They were sent from China. As no one claimed for this customs officials seized the materials.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X