For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவிலும் இடதுசாரிக்கு அடி, காங்கிரஸ் 72 இடங்களில் வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

Achuthanandan
திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் 72 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இடது சாரிகளுக்கு மேற்கு வங்கத்தைப் போன்று கேரளாவிலும் பின்னடைவு தான்.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 இடங்களில் 72-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடது சாரி 68 இடங்களில் வென்றுள்ளது. தற்போதைய முதல்வர் அச்சுதானந்தன் தான் போட்டியிட்ட மழம்புழாவில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி புதுப்பள்ளியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த முறை கேரளாவில் தேர்தல் பிரசாரத்தின்போது தலைவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் அச்சுதானந்தனுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலரே போர்க் கொடித் தூக்கினர். பின்னர் மேலிடத்தின் பரிந்துரையில் அவருக்கு சீட் கிடைத்தது.

காங்கிரஸ் வெற்றி பெற்றால் உம்மன் சாண்டி தான் முதல்வராவார் என்று கருத்து ஒருபுறம் இருக்க, அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவுக்கு முதல்வர் பதவியில் கண் உள்ளதால் அவர் முதல்வராகலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
Congress is leading in Kerala as the ruling CPM is trailing. Congress leads in 72 out of 140 constituencies while CPM is leading in 68.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X