For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தானியங்கி பெட்ரோல் நிலையங்கள் - இந்தியன் ஆயில் முடிவு

By Shankar
Google Oneindia Tamil News

Indian Oil Petrol Pump
சென்னை: கலப்படம், அளவு குறைவு என பெட்ரோல் நிலையங்கள் மீது வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் கூறிவருவதால், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் தானியங்கி முறைக்கு மாற்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கடுமையாக மோதிக் கொள்ளும் நிலை உள்ளது. இதற்குக் காரணம், அளவு குறைவு, கலப்படம் போன்ற புகார்கள்தான்.

இந்த புகார்களைக் களையும் பொருட்டு, இனி அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் தானியங்கி எந்திரங்களைப் பொருத்தும் முடிவுக்கு வந்துள்ளது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்.

நாடுமுழுவதும் மொத்தம் 19000 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு. இவற்றில் மாதம் 200 கிலோலிட்டர் விற்பனைத் திறன் கொண்ட 4500 நிலையங்களை மட்டும் இப்போதைக்கு தானியங்கி முறைக்கு மாற்றப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக 100 கிலோ லிட்டர் விற்பனைத் திறன் கொண்ட நிலையங்களும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும்.

English summary
In an effort to stem out pilferage, Indian Oil Corporation has started the process to automate the entire fuel filling process at fuel pumps across the country. The company owns 19,000 retail outlets across the country. In the first phase, 4,500 outlets which sells over 200 kilolitres per month would be automated. Of which, 1,600 outlets have already been completely automated. Work on the rest is currently on. In the second phase, retail outlets which sell 100 kilolitres of fuel a month would be automated, which ultimately will help in achieving better control of delivery, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X