For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை மறுநாள் சந்திரகிரகணம்: தமிழகத்தில் காணலாம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நாளை மறுநாள் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை தமிழக மக்கள் வெறும் கண்ணால் காண முடியும்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.

இந்த கிரகணங்கள் உலகில் எல்லா நாடுகளிலும், எல்லா சமயங்களிலும் தெரிவதில்லை. கிரகணங்களின் சுற்றுப்பாதையில் மேற்கூறிய குறுக்கீடுநேரத்தைப் பொறுத்து கிரகணங்கள் அமைவதால் இவை சில நாடுகளில் மட்டுமே தெரிகின்றன.

அத்தகைய சந்திர கிரகணம் நாளை மறுநாள்(15-ம் தேதி) ஏற்படுகிறது.

இது குறித்து சென்னை, பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது,

வரும் 15-ம் தேதி இரவு 11.45 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பிக்கிறது. இது நள்ளிரவு 1.40 மணிக்கு முழுமையடையும். 16-ம் தேதி அதிகாலை 3.40 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.

சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் வட்டம் முழுவதும் தெரியும். ஆனால் சந்திரன் ஒளி இழந்து சிவப்பு நிறத்தில் தெரியும். கிரகணம் முழுமையடையும்போது அதிகம் ஒளி இழந்து காணப்படும்.

இந்த சந்திரகிரகணத்தை தமிழ்நாடு முழுவதும் சாதாரண கண் கொண்டே பார்க்கலாம். அதனால் எந்தவித பாதிப்பும் வராது. எனினும் கிரகணத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க பிர்லா கோளரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் உள்ள அறிவியல் மையத்திலும் இதே போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி பகுதி சூரியகிரகணம் ஏற்படுகிறது. ஆனால் அது இந்தியாவில் தெரியாது என்றார்.

English summary
Total lunar eclipse will happen on june 15. People in Tamil Nadu can see this with the naked eye. Partial solar eclipse happens on july 1 but it won't be visible in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X