For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியாவுக்கான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள்- டிசம்பரில் வந்து சேரும்

By Chakra
Google Oneindia Tamil News

Boeing Dreamliner
டெல்லி: ஏர் இந்தியாவுக்கான முதல் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் டிசம்பர் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிகிறது.

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர். இந்த ரகத்தைச் சேர்ந்த 26 விமானங்களை வாங்க கடந்த 2006ம் ஆண்டில் இந்தியா ஆர்டர் செய்தது. இந்த விமானங்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், திட்டமிட்டபடி போயிங் நிறுவனத்தால் அதிகளவில் விமானங்களைத் தயாரிக்க முடியவில்லை.

இதனால், ஆர்டர் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின், வரும் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு 2 விமானங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதல் இரு விமானங்களையும் சிங்கப்பூருக்கு இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டு்ள்ளது.

அதைத் தொடர்ந்து புதிய விமானங்கள் வந்து சேர்ந்த பின் ஹாங்காங், துபாய், ஓசாகா, ஜகார்தா இடையே இந்த விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.

English summary
The delivery of the first Boeing 787 Dreamliner to Air India is understood to have been further pushed by two months to December this year. The ailing national carrier, which has been one of the first customers of this fuel-efficient plane, having placed orders for 27 of them way back in 2006, plans to fly them on medium-haul international routes. Singapore is likely to be the first foreign destination on which Air India plans to operate two of these Boeing-787s, which it expects to be delivered this calendar year itself, airline sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X