For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி நிதி வழங்க ராகுல் பஜாஜ் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Vijay Mallya and Rahul Bajaj
மும்பை: மும்பையில் நடந்த உலக பொருளாதார பேரையின் கூட்டத்தில் கிங்பிஷர் நிறுவனத்தின் நிதிக் குழப்பம் தொடர்பாக சூடாக விவாதிக்கப்பட்டது. கிங்பிஷருக்கு ஆதரவாக சிலரும், எதிராக சிலரும் கருத்து தெரிவித்தனர். பஜாஜ் நிறுவன தலைவர் ராகுல் பஜாஜ் பேசுகையில், சாக வேண்டியவன் செத்துதான் தீர வேண்டும் என்று சற்று கடுமையாகவே பேசினார்.

நேற்றைய கூட்டத்தில் பேசியவர்களில் சிலர் ஒரு தனியார் நிறுவன நஷ்டத்தை சரிக்கட்ட அரசு தலையிடுவது நியாயமில்லை என்று கருத்து தெரிவித்தனர். சிலரோ, இது பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே அரசிடம் உதவி கோருவதில் தவறில்லை என்று வாதிட்டனர்.

ராகுல் பஜாஜ் தனது கருத்தை தெரிவிக்கும்போது, பஜாஜ் ஆட்டோ ஒரு பெரும் குழப்பத்தில் சிக்கினால், நிதி நெருக்கடியில் சிக்கினால், யாராவது வந்து உதவுவார்களா?. நான் ஒரு தனியார் நிறுவன அதிபர். அதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் ஒரு தனியார் நிறுவனம் கஷ்டப்படுகிறதே, அதன் ஊழியர்கள் கஷ்டப்படுகிறார்கள், அதன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகிறார்களே என்பதற்காக அரசு வந்து உதவ வேண்டும் என்று சொல்வது லாஜிக்காக எனக்குத் தெரியவில்லை.

ஒருவன் மரணமடைய வேண்டியது விதி என்றால் அவன் மரணமடைந்துதான் ஆக வேண்டும் என்றார் அவர்.

அதேசமயம், ஜின்டால் நிறுவனதலைவர் நவீன் ஜின்டால், விஜய் மல்லையாவுக்கு ஆதரவாகப் பேசினார். அவர் கூறுகையில், அரசிடம் உதவி கேட்க கிங்பிஷருக்கு உரிமை உள்ளது. இது பல ஆயிரம் பேர் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். மேலும் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்று கிங்பிஷர். எனவே அரசு இதில் உதவ வேண்டும், உதவும் என நம்புகிறேன் என்றார் அவர்.

கிங்பிஷர் நிறுவனம் தற்போது ரூ. 7000 கோடி கடனில் உள்ளது. இதனால் தனது விமானங்களை கூண்டோடு ரத்து செய்து விட்டது அந்த நிறுவனம். நிறுவனம் ஆரம்பித்தது முதலே கிங்பிஷர் நஷ்டத்தில்தான் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.

English summary
At the World Economic Forum in Mumbai, Kingfisher’s financial mess was being hotly debated and corporate leaders were divided on the way forward for the troubled airline. While some believed there is no case for government bailout for the private sector, others said the airline is within its right to seek government help, given that there are thousands of jobs at stake. Bajaj Auto major Rahul Bajaj said, "If Bajaj Auto gets into a mess, would you bail me out... I am a very proud private sector man, but I don’t see the logic of bailing out any private company just because of the employees or customers.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X