For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

52 ரூபாய்க்கு ஒரு ஜோடி அடிடாஸ் ஷூ-விரைவில் இந்தியாவில் அறிமுகம்

Google Oneindia Tamil News

Adidas Shoe
பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள், உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் நிறுவனம் ரூ. 52 மட்டுமே விலை கொண்ட மலிவு விலை ஷூவை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பர்ட் ஹெய்னர் கூறுகையில், இதை வங்கதேசத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த முயற்சி கை கூடவில்லை. விரைவில் இந்த ஷூவை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்.

இந்தியாவில் உள்ள அத்தனை கிராமங்களிலும் இந்த மலிவு விலை ஷூவை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடம், எப்போது என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இது நடைபெறும் என்றார்.

ஒரு டாலர் விலையிலான இந்த ஷூவானது கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மார்க்கெட்டை குறி வைத்து இந்த ஷூவை களம் இறக்கியுள்ளது அடிடாஸ். சோதனை ரீதியான விற்பனையின்போது 5000, ரூ. 52 ஷூக்களை அடிடாஸ் நிறுவனம் விற்றுள்ளதாம்.

இந்த ஷூவின் விலை 52 ரூபாயாக இருந்தாலும், அதைத் தயாரிக்க தற்போதுஆகும் செலவு மிக அதிகமாகும். எனவே இந்த ஷூவை இந்தியாவிலேயே தயாரித்து விற்க அடிடாஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்புச்செலவைக் குறைக்க அது திட்டமிட்டுள்ளது.

English summary
German sportswear and equipment giant Adidas will soon launch a shoe that costs one dollar a pair in India, said Herbert Hainer, CEO of the company despite failed attempts to launch a similar venture in Bangladesh. Talking to Die Welt am Sonntag, Sunday newspaper he said that unlike Bangaldesh where an attempt to lauch similar venture did not succeed, mass production would be possible to supply the growing Indian market. "The shoe will be sold in villages through a distribution network," Hainer said, adding, "We want the product to be self-funding."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X