For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012 ஒலிம்பிக்ஸ் தூதர்களாக வில்லியம், ஹாரி, கேட் நியமனம்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் 2012ம் ஆண்டு லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இங்கிலாந்து அணியின் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 2012ம் ஆண்டு ஜூலை மாதம் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகள் முடிந்து ஒரு மாதம் கழித்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. உலக விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வாங்க தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 2012 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இங்கிலாந்து அணியின் அம்பாசிடர்களாக இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த 3 பேர் கூறுகையில், இங்கிலாந்து அணியின் அம்பாசிடர்களாக நியமிக்கப்பட்டிருப்பதில் பெருமைப்படுகிறோம். விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஆதரிக்க வேண்டும் என்று பொது மக்களை ஊக்குவிப்போம் என்றனர்.

அந்த 3 பேரும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடத்திற்கு சென்று பார்வையிடுவார்கள். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகளை சந்தித்து பேசுவார்கள்.

இது குறித்து இளவரசர் வில்லியம் கூறியதாவது,

கேத்ரின், நான் மற்றும் ஹாரி ஆகியோர் அம்பாசிடர்களானதில் சந்தோஷமாக உள்ளது. 2012ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடப்பது இளம் வீரர்களை சிறப்பாக விளையாட ஊக்குவிக்கும். இந்த போட்டிகளைக் காண நாங்கள் ஆவலாக உள்ளோம் என்றார்.

English summary
Prince William, his wife Kate and Prince Harry have been appointed as the official ambassadors of the British team that would participate in 2012 London Olympics and Paralympics. The royals will visit the venues and meet the athletes at the training camps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X