For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறை தடையல்ல: தமிழகத்தின் முதல் பார்வையற்ற தலைமை ஆசிரியர் நிரூபணம்

By Siva
Google Oneindia Tamil News

வேலூர்: மனோகரன் என்னும் கண் பார்வையற்றவர் தமிழகத்தி்ன் முதல் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 5 வயதில் கண் பார்வையை இழந்த அவர் 8வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து அங்கேயே 11ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார்.

இதையடுத்து ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமும், அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களும் பெற்றார். பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 198ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக 2 முறை இருந்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு அவருக்கு முதுகலை ஆசிரியராக பணிநியமனம் வழங்கப்பட்டது. இதையடுத்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக சேர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது இது தான் முதல் முறை ஆகும். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் இந்த பள்ளியில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் என் லட்சியம் என்றார்.

English summary
Tamil Nadu has got its first visually challenged head master named Manoharan. Manoharan lost his sight at the age of 5 but he never considers his disability as a hindrance to his success.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X