முல்லைப் பெரியாறு குறித்து பேச்சு நடத்த தமிழகம், கேரளாவுக்கு மத்திய அரசு அழைப்பு
Subscribe to Oneindia Tamil

இரு மாநில மூத்த அதிகாரிகளையும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அனுப்புமாறு இரு மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதில் தமிழகம் கலந்து கொள்ளும் என்று தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை நடந்தால், கடந்த 6 ஆண்டுகளில் இரு மாநிலங்களுக்கும் இடையே நடைபெறும் முதல் பேச்சாக இது அமையும்.
இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், இரு மாநில நீர்ப்பாசனத் துறை செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் திட்டங்களுக்கான கமிஷனர் பிரதீப் குமார் இக்கடிதங்களை எழுதியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி.சிங் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications